இரகங்கள்
நீலம், பெங்களூரா, நடுச்சாலை, சப்பட்டை, செந்துராம், ஹிமாயூதின், காலேபாடு, மோனி, மல்கோவா, பையூர் 1, அல்போன்சா, சிந்து.
undefined
வீரிய ஒட்டு இரகங்கள்:
பெரியகுளம் 1, பெரியகுளம் 2, தர்னா, மல்லிகா, அம்பராபாலி, மஞ்சிரா, அர்கா அருணா, அர்கா புனீத், அர்கா நீல்கிரன், சிந்து, சேலம் பெங்களூர்.
மண்ணும் தட்பவெப்ப நிலையும்:
நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் மா பயிர் செய்வதற்கு ஏற்றதாகும்.
மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 8 வரை இருக்க வேண்டும்.
பருவம்:
ஜீலை முதல் டிசம்பர் வரை
பயிர் பெருக்கம்:
ஒட்டுக் கட்டிய செடிகள்
நிலம் தயாரித்தல்
நிலத்தை 3 முதல் 4 முறை நன்கு உழவேண்டும்.
பின்பு 1 மீட்டர் நீளம் 1 மீட்டர் அகலம் 1 மீட்டர் ஆழம் உள்ள குழிகளை செடிகள் நடுவதற்கு 15 நாட்களுக்குள் முன்னர் வெட்ட வேண்டும்.
பின்னர் குழி ஒன்றுக்கு 10 கிலோ தொழு உரம் மற்றும் மேல் மண் நன்கு கலக்கப்பட்டு குழியின் முக்கால் பாகம் வரை மூடவேண்டும்.
கவாத்து செய்தல்
மா மரத்தில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கவாத்து செய்யப்பட வேண்டும்.
மரத்தில், தாழ்ந்து இருக்கும் கிளைகள், குறுக்கும், நெடுக்குமாக ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கும் கிளைகள், நோய் தாக்கிய மற்றும் மெல்லிய, பட்ட அல்லது காய்ந்த கிளைகள் ஆகியவற்றை நீக்க வேண்டும்.
இதன் மூலம் சூரிய வெளிச்சம் மற்றும் காற்று உள்ளே உள்ள கிளைகளுக்குக் கிடைத்து, மரம் நன்றாக வளர்ந்து பூ பூத்து காய்ப்பிடிக்க ஏதுவாகிறது.
மா மரத்தில் மூன்று வருடங்கள் வரை பூ பூப்பதை தவிர்க்க வேண்டாம். வருடத்திற்கு ஒரு முறை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நெருக்கமாக உள்ள கிளைகளை வெட்டிவிட்டு ஆரோக்கியமான கிளைகளை மட்டும் விடவேண்டும்.
வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல்
என்.ஏ.ஏ என்ற வளர்ச்சி ஊக்கி மருந்தை 20 பி.பி.எம் என்ற அளவில் இணர:டு முறை தெளிக்கவேண்டும். இவ்வாறு தெளிப்பதால் பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்பிடிப்பு அதிகரிக்கும்.
பிப்ரவரி மாதத்தில், பூ பூக்காத மரங்களுக்கு 0.5 சத யூரியா கரைசல் (5 கிராம் லிட்டர் ஒன்றுக்கு) அல்லது 1 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் (10 கிராம் லிட்டர் ஒன்றுக்கு) கரைசல் தெளிக்க வேண்டும்.
அறுவடை
மார்ச் முதல் ஜீன் வரை அறுவடை செய்யலாம். இரகத்திற்கு ஏற்பவும், நடப்படும் இடைவெளிக்கேற்பவும் மகசூல் மாறுபடும்.