நிலம் தயார்படுத்துதல்
1.. ஒரு எக்டேர் நிலத்திற்கு தேவையான நாற்றுகள் 7.5 சென்ட் நிலம். நீர் ஆதாரம் உள்ள இடத்தில் தேர்வு செய்ய வேண்டும். தேங்கிய நீர் பயன்படுத்தக் கூடாது.
2.. நிலத்தை நன்றாக உழ வேண்டும்.
தொழு உர பயன்பாடு
அ. 750 கிலோ தொழுஉரம் இட்டு உழுதல் வேண்டும்.
ஆ.. 500 கிலோ தொழுவுரம் கொண்டு விதைகளை மறைக்க வேண்டும்.
நாற்றங்கால் படுக்கை தயாரித்தல்
1.. ஒவ்வொரு சென்டிலும் 3 × 1.5 மீ அளவுள்ள 6 பாத்திகள் அமைக்க வேண்டும். 30 செ.மீ அளவுள்ள வாய்க்கால்கள் ஒவ்வொரு பாத்திகளுக்கு இடையேயும் சுற்றியும் அமைக்க வேண்டும்.
2.. வாய்க்காலின் ஆழம் 15 செ.மீ இருக்க வேண்டும்
3.. படுக்கை அளவை பொருத்து வாய்க்காலை பூமியில் அகழ்ந்த குட்டையாக பரப்ப வேண்டும்.
4.. ஆறு அடுக்கு பிரிவு கொண்ட ஒரு சென்டிற்கு ஒரு அலகு பாசனம் அமைக்க வேண்டும்.
விதைப்பு மற்றும் விதைகளை மூடுதல்
அ,. படுக்கையில் விரல்கள் மூலம் 1 செ.மீ குறைவான ஆழத்தில் சிற்றோடை திறக்க வேண்டும்.
ஆ. 7.5 சென்ட்டில் 3.75 கிலோ விதைகள் தேவை (0.5 கிலோ /சென்ட்) மற்றும் சோளகுருத்து ஈ தொற்று உள்ள பகுதிக்கு 12.5 கிலோ/ஹெக்டேருக்கு தரமான நாற்றுகளை உருவாக்க தேவைப்படும்.
இ. 500 கிலோ தொழுஉரம் அல்லது மக்கிய உரம் தூவி விதைகளை கைகளால் மிருதுவாக மூடவேண்டும்.
ஈ. விதைகளை ஆழமாக விதைத்தால் முளைப்பது பாதிக்கப்படும்.
நடவு பயிர்
1.. களை முளைப்பதற்கு முன் அட்ராசைன் 0.25 கிலோ /ஹெக்டர் நாற்று நட்ட பிறகு தெளிக்க வேண்டும். கையால் களையெடுக்க நாற்று நட்ட பிறகு 30-35 நாம் நாட்களில் எடுக்க வேண்டும்.
2.. களைகொல்லி பயன்படுத்தி கையினால் களையெடுத்தால் நாற்று நட்ட பிறகு 15 நாளுக்குள் இரு முறையும் மற்றும் 30 – 35 நாளில் களையெடுக்க வேண்டும்.
நேரடி விதை விதைப்பு
1.. விதைத்த 3 நாட்களுக்கு பிறகு களை முளைப்பதற்கு முன் அட்ராசைன் 0.25 கிலோ/ஹெக்டர் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணின் மேற்பரப்பில் பேக் -பேக்/நேப்சேக்/ராக்கர் தெளிப்பான் உதவியால் தெளிக்கவும்.
2.. மண்ணில் தேவையான அளவு ஈரப்பதம் இருக்கும்பட்சத்தில் களைகொல்லியை பயன்படுத்தவும்.
3.. விதைத்த 30-35 நாட்களுக்கு பிறகு கையால் களையெடுக்வும். களைமுளைப்பதற்கு முன் களைகொல்லிகளை பயன்படுத்தவும்
4.. களை முளைப்பதற்கு முன் களைகொல்லி தெளிக்கவில்லை என்றால் விதைத்த பிறகு 15 மற்றும் 30 நாட்களில் இரண்டு முறை கையினால் களை எடுக்கவும்.
பயிர்கலைத்தல் மற்றும் இடைவெளி நிரப்புதல்
நேரடி விதை பயிரில் முதல் களையெடுப்பது பாசனத்தின்போதும், இடைவெளியை நிரப்ப 15 செ.மீ இடைவெளியில் உள்ள பயிருக்கு 20 செ.மீ இடைவெளியில் தட்டைபயிரும் மற்ற பயிர்களாக இருந்தால் 10 செ.மீ இடைவெளி வேண்டும்.
மேலுரமிடுதல்
1.. நாற்று நட்டு அல்லது நேரடி விதைத்த 15 மற்றும் 30 நாட்களில் நைட்ரஜனை மேலுரமாக இட வேண்டும்
2.. நாற்று நடுதலாக இருந்தால் ஒரு குச்சியினால் 5 செ.மீ ஆழத்திற்கு ஒரு குழியை தோண்டி அதன் அடியில் உரத்தை வைத்து மூடவேண்டும்.
3.. நேரடி விதைத்தலில் உரத்தை பட்டையில் இட வேண்டும். ஊடுபயிராக தானியம் விதைத்திருந்தால் உரத்தை கம்பிற்கு மட்டும் இட வேண்டும்.
4.. உரம் வைத்த பிறகு பாசனம் செய்ய வேண்டும்.
அறுவடை
இலைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறி உலர்ந்த தோற்றத்திலும், தானியங்கள் கடினமாகவும் இருக்கும்பொது, தானிய கதிரை தனியாக அறுக்க வேண்டும். வைக்கோலை ஒரு வாரம் காயவிட்டு போக்குவரத்து எளிதாக இருக்கும்போது அறுவடை செய்ய வேண்டும்.