நீடித்த நவீன கரும்பு சாகுபடி செய்வதால் கிடைக்கும் பயன்கள் இதோ…

 |  First Published May 11, 2017, 1:01 PM IST
Here are the benefits of modern sugarcane cultivation



முக்கியக் கோட்பாடுகள்

1.. ஒரு விதைப் பரு சீவல்களிலிருந்து நாற்றங்கால் அமைத்தல்

Tap to resize

Latest Videos

2.. இளம் (25-35 நாட்கள் வயதான) நாற்றுகளை எடுத்து நடவு செய்தல்

3. வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளியும், நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியும் பராமரித்தல்

4.. சொட்டு நீர்ப் பாசனத்தின் வழி உரமிடுதல்

5.. இயற்கை சார்ந்த உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகளுக்கு போதிய அளவு முக்கியத்துவம் அளித்தல்

6.. ஊடுபயிரிட்டு மண்வளம் மற்றும் மகசூல் அதிகரிக்க வழி செய்தல்

நீடித்த நவீன கரும்பு சாகுபடியின் பயன்கள்

1.. தண்ணீர் உபயோகிப்புத் திறன் கூடுகிறது.

2.. சரியான  அளவு உரங்களை உபயோகிப்பதன் மூலம் பயிர்களுக்கு  ஊட்டச்சத்து பராமரிப்பு சிறப்பாக அமைகிறது.

3.. காற்று மற்றும் சூரிய ஒளி அதிக அளவு பயிர்களுக்கு கிடைக்கிறது. அதனால் கரும்பில் சாக்கரைக் கட்டுமானம் அதிகரிக்கிறது.

4.. மொத்த சாகுபடி செலவு குறைகிறது

5.. விவசாயிகளுக்கு ஊடுபயிர் மூலம் இரட்டை வருமானம் கிடைக்கிறது.

6.. மகசூல் அதிகரிப்பு

click me!