சோளம் சாகுபடி நுட்பங்கள்…

 |  First Published Nov 2, 2016, 3:29 AM IST



சோளம் தீவனம், தீவனப்பயிர் மற்றும் தானியப் பயிராகப் பயன்படுத்தப் படுகிறது. தமிழகத்தில் நாமக்கல், திண்டுக்கல், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், விருதுநகர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பெரும்பாலும் பயிரிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் சோளம் ஆடிப்பட்டம் (ஜூலை – செப்டம்பர்), புரட்டாசி பட்டம் (அக்டோபர் – டிசம்பர்) மற்றும் கோடை காலங்களில் பயிரிடப்படுகிறது. கோ.30 என்ற ரகம் தீவனத்துக்கும், உணவுக்கும் ஏற்றது. இந்த ரகம் அதிக மகசூல் கொடுப்பதால் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Tap to resize

Latest Videos

சோள சாகுபடியில் முக்கியமாக இரண்டு கட்டங்கள் உள்ளன. அதாவது பூ பூக்கும் போதும், கதிரில் பால் பிடிக்கும் போதும் மழை வந்து விடக்கூடாது. இதைக்கவனித்து சாகுபடி செய்வது நல்லது. விதைப்பு செய்த 30ம் நாள், பூ வைக்கும் 90ம் நாள் கதிர்களில் பால் பிடிக்கும்.

இந்த நாட்களில் மழை பெய்து விட்டால் கதிரில் பூஞ்சாணம் பிடித்து விடும். விளைச்சலும் நன்றாக இருக்காது. கோவில்பட்டியில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் கே.12 என்ற ரகத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த ரகம் மானாவாரி சாகுபடிக்கும் கரிசல் மண் வகைக்கும் ஏற்றது. தானியச் சோளத்தின் தற்போதைய பண்ணை விலை ரூ.21 முதல் 23 வரை சந்தையில் விற்கப்படுகிறது.

click me!