கோழிக்குஞ்சுகள் வளர்ப்பு முறைகள்…

 |  First Published Nov 2, 2016, 3:26 AM IST



8000 ஆண்டுகளுக்கு முன்பே வீடுகளில் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரம் உள்ளது. ஆனால் இன்று பல நோய்களால் குஞ்சுகளிலேயே இறந்து விடுகின்ற சதவீதம் அதிகரித்து விட்டது. இன்று நல்ல வருமானம் தரக்கூடிய இத்தொழிலில் முக்கிய விஷயம் இளங்கோழிக் குஞ்சுகளின் பராமரிப்பு ஆகும்.

கோழிக் குஞ்சுகள் வருவதற்கு 15-20 நாட்களுக்கு முன் கொட்டகைகளை சீரமைத்து சுத்தம் செய்ய வேண்டும். ஆழ் கூழங்களை அப்புறப்படுத்தி, தண்ணீரினால் கிருமி நாசினிகள் கொண்டு இரண்டு அல்லது மூன்று முறைகள் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

Latest Videos

undefined

ஆழ் கூழ் பொருட்களான உமி, மரத்தூள், கடலை பொக்கு, தேங்காய் மஞ்சு போன்றவற்றை வாங்கி, கிருமி நாசினி கொண்டு (பார்மலின்) தெளித்து அதனைக் கொட்டகையில் வைக்க வேண்டும்.

இயற்கை முறை அடை காப்பான் முறை:

தன் குஞ்சுகளுக்கு கோழிகளே தேவையான வெப்பம் தரும். 15 முதல் 20 குஞ்சுகளை உடல் பருமன் பொறுத்து கோழி அடை காக்கும்.

இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தீவனக் கலவையாகவோ அல்லது குருணை தீவனமாகவோ குஞ்சுகளுக்கு அளிக்க வேண்டும்.

செயற்கை முறை அடைகாப்பான் முறை:

செயற்கையாக அடை காக்கும் இயந்திரங்கள் பல அளவுகளில் பல வகைகளில் வந்து விட்டன. அவற்றை (தரமான) பயன்படுத்தியும் அடை வைக்கலாம். அடைகாப்பானை கோழிக் கொட்டகையின் ஒரு பகுதியில் ஏற்பாடு செய்யலாம்.

நாம் எத்தனை குஞ்சுகளை வளர்க்க இருக்கிறோம் என்பதற்கு ஏற்றபடி இடம் தேர்வு செய்ய வேண்டும். குஞ்சுகள் வந்ததும் தீவனம், தண்ணீர் கொடுப்பதில் கவனமாக, விஞ்ஞான முறையில் கொடுத்து வர வேண்டும். அவற்றுக்கு தேவையான சூடு (வெப்பம்) சரியான அளவு கொடுக்க வேண்டும்.

மின்விளக்கு அல்லது எரிதண்டின் மூலம் அல்லது மரக்கரி அடுப்பு மூலம் வெப்பம் அளவோடு தர வேண்டும். கழிவுகளை மூன்று நாட்களுக்கு ஒருமுறை அகற்ற வேண்டும். அதிக கவனமாக வளர்த்தால் இறப்பினை தவிர்க்கலாம்.

click me!