தரமான மற்றும் அதிகப்படியான காய்கள் கொண்ட மரத்தை தேர்வு செய்து அதில் அடிக்கிளையில் காய்க்கும் காய்களை விட்டு விட்டு பிற காய்களை முற்ற விட்டு, நன்கு காயவைத்து நல்ல வீரியமான விதைகளைப் பிரித்து எடுக்க்க வேண்டும்.
மண்புழு உரத்தை மண்மணலோடு கலந்து பாக்கெட் போட்டு, ஒரு பாக்கெட்டுக்கு 2 விதைகளை விதைத்து, 15-20 நாட்களுக்குள்ளாக எடுத்து செடியை நடவும்.
நிலத்தை உழுது சமப்படுத்தி 8 அடிக்கு 6 அடி இடைவெளியில் 1 அடி ஆழமுள்ள குழிகளைத் தோண்டி, மேல் மண்ணால் மூடி 2 செடிகளை நட வேண்டும்.
முருங்கைக்கு பொதுவாக அதிகமாக தண்ணீர் தேவை இருக்காது. வாரம் ஒருமுறை 2 மணி நேரம் சொட்டுநீர்ப் பாசனம் செய்தால் போதும். உரம் மருந்து போன்றவற்றையும், டிரிப் மூலமாகவே கொடுத்திடலாம்.
செடி வெச்சு 4 மாதம் கழித்து டி.ஏ.பி.யை செடிக்கு 100 கிராம் அளவுக்கு செடியைச் சுற்றி குழியைப் பறித்து வைக்க வேண்டும். 19:19:19 என்ற கலப்பு உரத்தை ஏக்கருக்கு 2 கிலோ அளவில் வாரத்திற்கு ஒருமுறை கொடுக்கனும். பூ எடுக்கும் வரைக்கும் ஈரத்தன்மை அதிகமாக இருக்கக் கூடாது. பூக்கும் தருணத்தில் சைட்டோசைம் இலைவழி திரவத்தை கொடுக்கனும்.
பூ பூக்கறதுக்கும், காய்ப்பிடிப்பதற்குமான மருந்துகளை 15 நாள் இடைவெளியில் அடிச்சிட்டே வரனும். காய்ப்புழுவிற்கு இமாமெக்டின் பென்சோயேட் மருந்தை சரியான நேரத்தில் அடிக்கனும்.
சொட்டுநீர்ப்பாசனம், வேர்வழி உரம், வளர்ச்சி ஊக்கிகள், நுண்ணூட்டச்சத்து உரங்கள் பயோ ஆர்கானிக்ஸ் ஆகியவற்றை கொடுப்பதால் தொடர் விளைச்சலுக்கும், பசுமை மாறா காய்களை ஏற்றுமதி சந்தைக்கு அனுப்புவதற்கு உண்டான வெற்றி சூத்திரங்கள்.