மக்காச்சோளத்தை இந்த முறையில் தான் பயிரிடணும்…

 |  First Published Sep 13, 2017, 12:42 PM IST
Maize corn is cultivated in this way ...



மக்காச்சோளம் பயிரிடும் முறை:

1.. மக்காச்சோளத்தை ஐப்பசியில் பயிரிட்டேன். விதைப்பதற்கு முன்பாக நிலத்தில் கட்டிகள் இல்லாதவாறு தொடர்ந்து பலமுறை உழவு செய்ய வேண்டும்.

Tap to resize

Latest Videos

2.. மண் பொலிவாக இருந்தால் தான் வேர் வெகுவாக கீழே செல்லும். மண் பரிசோதனைப்படி உரமிட்டால், உரம் வீணாவதை தவிர்க்கலாம்.

3.. ஒரு எக்டேருக்கு அடியுரமாக 135 கிலோ டி.ஏ.பி.,- 30 கிலோ யூரியா, 85 கிலோ பொட்டாஷ் இட வேண்டும்.

4.. தொடர்ந்து 12.5 கிலோ நுண்ணூட்ட சத்துகளை 20 கிலோ மண் கலந்து இட வேண்டும். 52/11 என்ற வீரிய ரக விதைகளை பயன்படுத்தலாம்.

5.. ஒரு எக்டேருக்கு 12.5 கிலோ வரை விதைவேண்டும்.

6.. அசோலோ பைரியம் மூலம் விதை நேர்த்தி செய்தால், வேருக்கு தேவையான தழைச்சத்தை பெற்று தரும்.

7.. ஒரு கிலோ 10 கிராம் டிவிரிடி அஸ்சோடோமோனசில் பூஞ்சன விதை நேர்த்தி செய்தால், நோய் தாக்குதல் ஏற்படாது. 60 X 20 செ.மீ., இடைவெளியில் விதைகள் நட வேண்டும்.

8.. களைகொல்லி பயன்படுத்தலாம். களையெடுக்கும்போது, மேலுரமாக 150 கிலோ யூரியா பயன்படுத்த வேண்டும்.

9.. பால் பிடிக்கும் தருணத்தில் 75 கிலோ யூரியா பயன்படுத்த வேண்டும். கிணற்று பாசனம் மூலம் நீர் பாய்ச்சலாம்.

10.. சொட்டுநீர் பாசனம் பயன்படுத்தினால், நீரை மிச்சப்படுத்தலாம். 15 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும்.

click me!