வெங்காயம் அளவில் சிறியதாக இருந்தாலும், சில நேரங்களில் ஆட்சியையே ஆட்டம் காணச் செய்து விடும். ஆட்சியாளர்களையே அந்தப் பாடுபடுத்தும் வெங்காயம் விவசாயிகளை மட்டும் விட்டு வைக்குமா என்ன?
சில நேரங்களில் வருமானத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தாலும், பல நேரங்களில் விலை இல்லாமல் விவசாயிகளை கண்ணீர் விட வைத்து விடுகிறது. அறுவடை முடிந்ததும் கிடைத்த விலைக்கு விற்பனை செய்யாமல் சேமித்து வைக்கும் வசதி இல்லாமல் பல விவசாயிகள் அந்த எண்ணத்தையே கைவிட்டு விடுகிறார்கள்.
இவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் குறைந்த செலவில் வெங்காய சேமிப்புக் கலன் அமைக்கலாம்.
“கட்டுப்படுத்தப்பட்ட காற்றோட்ட வசதியுள்ள வெங்காய சேமிப்புக் கலன்” வீட்டுத் தேவைக்கு 50 கிலோ வெங்காயத்தை சேமிக்கிற மாதிரி, ‘வீட்டு சேமிப்புக் கலனையும், ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிலோ வரையிலான வெங்காயத்தை சேமிக்கிற மாதிரி விவசாயிகளுக்கான சேமிப்புக் கலன்னு ரெண்டு விதமா அமைக்கலாம்.
இரண்டு விதமான சேமிப்புக் கலன்களையும் இரும்புக் கம்பிகளால் செவ்வக வடிவ வீட்டுக் கூண்டு போல இருக்கும்.
சேமிப்புக் கலன், 4 அடிக்கு 3 அடி என்ற அளவில், தரையில் இருந்து, அரை அடி உயரத்தில் மர ரீப்பரை வெச்சு தளம் மாதிரி இருக்கும். அதே உயரத்துல, அடுத்தது மூன்று லேயர்களை இருக்கும்.
விவசாயிகளுக்கான சேமிப்புக் கலன், 10 அடிக்கு 10 அடி அளவில் தரையில் இருந்து 3 அடி உயரத்துக்கு மேல், மர ரீப்பர் மூலமா தளம் அமைச்சிருக்கோம். இதுல ஒரே ஒரு லேயர் மட்டும் தான் இருக்கும். விவசாயிகளுக்கான சேமிப்புக் கலனோட மேற்கூரையை அலுமினிய தகடால் இருக்கும்.
சரியான காற்றோட்டம், சேமிப்புக் கலனை சுற்றியும் தண்ணி தேங்காத இடங்கள்லதான் இந்த வெங்காய சேமிப்புக் கலன்களை அமைக்கணும்.
வெங்காயத்தாளை பாதியளவுக்கு மட்டும் விட்டு, மீதியை வெட்டி எடுத்துட்டு, மூணு நாளைக்கு வெயில்ல காய வைக்கணும். அப்போதுதான் வெங்காயத்துல இருக்கிற ஈரப்பதம் ஆவியாகி, வெங்காயத்தோட ஒட்டிக்கிட்டு இருக்கும் மணலும் தனியா உதிரும்.
பிறகு, தோராயமா கால் கிலோ அளவுள்ள வெங்காயத்தை எடுத்து தாளோடு சேர்த்து மொத்தமா கட்டி, மர ரீப்ப்ர் தளத்து மேல படுக்க வைக்கணும். முதல் ஒரு மாசத்துக்கு, ரெண்டு நாளைக்கு ஒரு முறை கட்டை திருப்பித் திருப்பி விடணும். ஒரு மாசத்துக்குப் பிறகு, 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் திருப்பி விட்டா போதும்.
ஈரோடு சுற்று வட்டார விவசாயிகளுக்கு இந்த வெங்காய சேமிப்புக் கலன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக விவசாயிகள் எல்லா காலத்துக்கும் வெங்காயத்தைப் பயிரிட்டு, அதனை 3 – 4 மாசம் வரை கெட்டுப்போகாம பாதுகாக்க முடியும். இதனால நிலையான வருமானமும் கிடைக்கும்.
வீட்டு சேமிப்புக் கலன்களை அமைக்க 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரைதான் செலவாகும். விவசாயிகளுக்கான சேமிப்புக் கலனை அமைக்க, 70 ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வரை செலவாகும். இந்த பணத்தை ஒரு வருஷத்துலயே எடுத்துடலாம்.