சந்தைகளில் கிடைக்கும் முயல்கூண்டுகள், இரும்பு வலை மற்றும் இரும்புத் தடிகளைக் கொண்டது. இந்த இரும்புக் கூண்டுகள் காற்று மற்றும் நீரில் படும்பொழுது எளிதில் துருப்பிடித்து விடும். மேலும் இரும்புக்கூண்டு பொலிவை இழப்பதால் அடிக்கடி மாற்றும் நிலை ஏற்படும்.
கால்நடைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணையில் உருவாக்கப்பட்ட முயல்கூண்டு இரும்புத் தடிகளுக்குப் பதிலாக பி.வி.சி குழாய்களால் ஆனது. இதன் மூலம் துருப் பிடித்தலிலிருந்து விடுபடுவது மட்டுமின்றி கூண்டின் எடையும் குறைகிறது.
இந்த முயல்கூண்டு 12 பிரிவுகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு பிரிவும் 3 சதுர அடி இட வசதியைக் கொண்டது. முயல்பண்ணை மற்றும் வீடுகளில் முயல் வளர்ப்போருக்கு உகந்தது.
ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எளிதாகக் கொண்டு செல்லலாம்.
முயல்கள் சௌகரியமான சூழ்நிலையில் வளரும். முயல் குட்டிகளுக்கென்றே தனியாக பெட்டி ஒன்று வைக்கப்பட்டு இருக்கும். விரைவாகவும், எளிய முறையிலும் சுத்தப்படுத்தலாம்.
சந்தைகளில் கிடைக்கக்கூடிய பல அடுக்கு முயல்கூண்டின் விலை தோராயமாக 22 ஆயிரம் ரூபாய் இருக்கும். இந்த வடிவக் கூண்டின் விலை 5 ஆயிரத்து 200 ரூபாய் மட்டுமே.