நீங்களே செய்யலாம் பூச்சி விரட்டிக் கரைசல்; அதிக பயனளிக்கும்…

Asianet News Tamil  
Published : Feb 17, 2017, 12:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
நீங்களே செய்யலாம் பூச்சி விரட்டிக் கரைசல்; அதிக பயனளிக்கும்…

சுருக்கம்

பூச்சி விரட்டிக் கரைசல் செய்ய தேவையானவை:

கசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ,

பாலுள்ள செடி (எருக்கு இலை) 2 கிலோ,

துவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ,

கொய்யா இலை 1/2 கிலோ,

கரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2 கிலோ

மேற்கண்ட இலைகளை உரலில் இட்டு ஆட்டி 10 லிட்டர் கோமியத்தில் கலக்க வேண்டும்.

1/2 கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி தண்ணீரில் கரைத்து மேற்கண்ட கரைசலுடன் சேர்த்து, கரைசலை பிளாஸ்டிக் அல்லது சிமென்ட் தொட்டியில் தயாரிக்க வேண்டும். நிழலான இடத்தில் மூடி வைக்க வேண்டும்.

இரண்டு நாள் கழித்து வடிகட்டி 1லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் நீர் சேர்த்து தாவரங்களின் இலைகளில் தெளிக்க வேண்டும்.

அடர்த்தியான இலைப்பகுதிகளில் இக்கரைசலை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.

5 கிராம் காதி சோப்புக் கரைசலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். இலைகளில் கரைசலின் நாற்றம் இருந்து கொண்டு இருக்கும். எனவே பூச்சிகள் நெருங்காது.

ஒவ்வொரு தடவை தெளிக்கும் போது வேறு மூன்று, நான்கு ரக குலைகளை மேற்கண்டவாறு ஊறப்போட்டு 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்துக் சோப்புக் கரைசலையும் சேர்த்து தெளிக்க வேண்டும்.

இவ்விதம் தயார் செய்த பூச்சி விரட்டிக் கரைசலின் மூலம் பெரும்பாலான பூச்சிகளை விரட்டி விடலாம்

 

PREV
click me!

Recommended Stories

Govt Scheme: ரூ.15,000 வரை மானியம்..! விவசாயிகள் உடனே விண்ணப்பிக்க வேண்டிய திட்டம் இது..!
Crop Loan Waiver 2026: பயிர்க்கடன் முழுசா தள்ளுபடி! யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம் இதோ!