உங்களுக்குத் தெரியுமா? இந்த மூன்று குடற்புழுக்கள் தான் கால்நடைகளை அதிகம் தாக்குகின்றன…

 |  First Published Feb 16, 2017, 1:02 PM IST



கால்நடைகளை பல்வேறு வகை குடற்புழுக்கள் தாக்குகின்றன. முக்கியமாக அவை மூன்று வகைப்படும்.

1. தட்டைப்புழுக்கள்

Tap to resize

Latest Videos

2. உருண்டை புழுக்கள் மற்றும்

3. நாடாப்புழுக்கள்.

நோயின் அறிகுறிகள்:

உணவு உட்கொள்ளாமை, கால்நடைகளின் தோல் பராமரிப்பு குறைந்து சொர சொரப்பாகக் காணப்படும். சில நேரங்களில் நீண்ட முடி முளைத்திருக்கும்.

துர்நாற்றத்துடன் பேதி, அதிக வயிற்றுப் போக்கின் காரணமாக கால்நடைகளின் உடலில் நீரின் அளவு குறைந்து தோல்கள் தடிப்புடன் உலர்ந்து காணப்படும்.

இரத்த சோகை:

குடற்புழுக்கள் குடலின் பல பகுதியில் ஒட்டிக் கொண்டு தன் வளர்ச்சிக்காக இரத்தத்தை உறிஞ்சிக் கொள்கிறது. முகத்தில் அல்லது கழுத்தில் வீக்கம் காணப்படும்.

விளைவுகள்:

மாடுகள் உடல் எடை குறைந்து பலவீனம் அடைகிறது. பால் மற்றும் இறைச்சி உற்பத்தியில் அளவு குறைகிறது. மாடுகள் இறக்க நேரிடுகிறது.

தடுப்பு முறைகள்:

அ. சாணத்தை முறையாக அவ்வப்போது கொட்டகையிலிருந்து நீக்க வேண்டும். ஈரமற்ற இடத்தில் கால்நடைகளை வளர்க்க வேண்டும்.

ஆ. வற்றிய குளங்களில் சிறிது நீர் உள்ள போது குளத்தினுள் மாடுகள் மேய்ப்பதைத் தடுக்க வேண்டும்.

இ. குடற்புழு தாக்குதல், குடற்புழு நீக்க மருந்துகளை அனைத்து மாடுகளுக்கும் கொடுக்க வேண்டும்.

ஈ. தீவன மற்றும் தண்ணீர் தொட்டிகள் தூய்மை செய்ய வேண்டும்.

click me!