தண்ணீர் செலவு குறைவு. மகசூல் அதிகம் - அதுதான் நிலப்போர்வை முறை….

 |  First Published Sep 14, 2017, 12:23 PM IST
Less water cost The yield is too much - that is the landing system ....



நிலப்போர்வை முறை

கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும்.  பயிர்களை காப்பாற்ற நிலப்போர்வை அமைக்க வேண்டும்.

Tap to resize

Latest Videos

பிளாஸ்டிக் மல்ச்சிங், இயற்கை உர மல்ச்சிங் என்ற இரண்டு முறையின் மூலம் விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியும். பிளாஸ்டிக் மல்ச்சிங் முறை மூலம், நீர் ஈரப்பதம் பராமரிக்கப்படுவதால், பயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது.

மழை காலத்தில் செடியில் உள்ள வேரில் நீர் தேங்காமல் இருப்பதால், அழுகல் நோயிலிருந்தும் தப்பலாம். அசுவின் என்ற பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தவும் முடியும்.

நிலப்போர்வை முறையை கடைபிடிப்பதன் மூலம் மூன்று நாட்களுக்கு முன்பாகவே மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். நிலப்போர்வை அமைக்க, தமிழக அரசு மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது.

தேசிய தோட்டக்கலை திட்டத்தின் மூலம், நிலப்போர்வை வாங்க, 10 ஆயிரம் ரூபாய் மானியம் அளிக்கப்படுகிறது. விவசாய பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் நிலப்போர்வை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ஒரு போகம் முடிந்ததும், நிலத்தை மீண்டும் களைக்காமல், மற்றொரு போகம் பயிர் செய்ய முடியும். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள விவசாயிகள் மிளகாய், தக்காளி, தர்ப்பூசணி போன்ற பயிர்களை நிலப்போர்வை மூலம் பயிரிட்டுள்ளனர். இந்த பகுதியில், 50 எக்டர் பரப்பளவில் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

நிலப்போர்வை முறையில், சொட்டு நீர் பாசனம் பயன்படுத்துவதால், தண்ணீர் செலவு குறைகிறது. மகசூல் அதிகம் கிடைக்கிறது.

click me!