நம் நாட்டு வேளாண்மைக்குத் தகுந்தவாறு பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் வேளாண்மை பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வாயிலாக பெரும்பாலான விவசாய கருவிகள் நம் விவசாயிகள் பயன்படுத்த பெரிதும் வழிவகை செய்கின்றன.
உழவு முதல் அறுவடை பின் நேர்த்தி வரை பல்வேறு இயந்திரங்கள் மற்றும் கருவிகள் உருவாக்கப்பட்டு, அரசாங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் தரப்பட்டு வேளாண் உற்பத்தி செலவை குறைக்க உதவுகின்றன.
உழவிற்கு பயன்படும் கருவிகள்..
உழவிற்கு பயன்படும் கருவிகள், விதை விதைக்கும் கருவிகள், களை மற்றும் இடை உழவு கருவிகள், பயிர் பாதுகாப்பு கருவிகள், அறுவடை கருவிகள், அறுவடைக்கு பின் செய்நேர்த்தி கருவிகள் செயல்பாட்டில் உள்ளன.
நன்செய் நிலங்களுக்கு…
நன்செய் நிலங்களில் நேரடி நெல் விதைக்கும் கருவி, இறவையில் டிராக்டர் கொத்துக் கலப்பையுடன் இணைந்த விதை விதைக்கும் கருவி, நெல் நாற்று நடும் கருவியான, யான்ஞி சக்தி நாற்று நடும் கருவி, யான்மாக் நாற்று நடவு இயந்திரம், கொரியாவகை நடந்து இயக்கும் நடவு இயந்திரம், நெற்பயிரில் களை எடுக்கும் கருவி, விசை களையெடுப்பான், இன்ஜினால் இயங்கும் நெல் அறுவடை இயந்திரம் ஒன்றுபட்ட நட்டு அறுவடை செய்யும் இயந்திரம் செயல்பாட்டில் உள்ளன.
தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடிக்கு…
தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடியில் பயன்படும் குழித்தட்டில் விதையிடும் கருவி, காய்கறி நாற்றுக்கள் உற்பத்திக்கான குழித்தட்டில் விதையிடும் தானியங்கி கருவி, டிராக்டரினால் இயங்கும் காய்கறி நாற்று நடக்கூடிய இயந்திரம், டிராக்டரினால் இயங்கும் குழி தோண்டும் கருவி, சுழலும் மண்வெட்டி, களை எடுக்கும் கருவி,
வாழை இலை அறுவடை செய்ய…
வாழை இலை அறுவடை செய்ய உதவும் தாங்கும் சாதனம், டிராக்டரில் இயங்கும் வாழைக்கட்டைகளை அகற்றும் கருவி, மரங்களிலிருந்து மா, சப்போட்டா, கொய்யா பழங்களை பறிப்பதற்கான கருவிகள், தென்னை மரம் ஏறும் கருவி, மஞ்சள் கரணை பிரித்தெடுக்கும் கருவி,
மஞ்சள் அறுவடை செய்ய…
மஞ்சள் அறுவடை செய்யும் கருவி, டிராக்டரால் இயங்கும் மரவள்ளிக் கிழங்கை தோண்டி எடுக்கும் கருவி, தேங்காய் பறிப்பதற்காக உயர்மட்டத் தளம்,
மானாவாரி சாகுபடிக்கு…
மானாவாரி சாகுபடிக்கேற்ற கருவிகளை தவிர இன்னும் பலப்பல இயந்திரங்கள் கருவிகள் கண்டுப்பிடிக்கப்பட்டு விவசாயிகளின் இயந்திரமயமான விவசாயத்தை மேற்கொண்டு முன்னேற்றம் பெறலாம்.