கொடைக்கானல் பட்டர்பீன்ஸ் பயிரிட்டு நல்ல இலாபம் ஈட்டலாம்…

 |  First Published Jan 31, 2017, 12:18 PM IST



தேனி மாவட்டம் முழுமையாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்த கருமைப் பகுதியாக, மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வைகையில் நீரோடும் மூன்று முதல் ஐந்து மாதங்கள் மட்டுமே, இப்பகுதியில் உள்ள போர்வெல்களிலும், கிணற்றிலும் நீர் ஊற்று கிடைக்கும்.

Latest Videos

undefined

மற்ற நாட்களில் இப்பகுதி போர்களும், கிணறுகளும் வறண்டு விடும். இப்பகுதி முழுவதும் ஒருபோக சாகுபடி மட்டுமே நடக்கிறது.

இங்குள்ள செம்மண் பூமியில் 4 ஏக்கர் நிலத்தில், வழக்கமான மக்காச்சோளம், வெங்காயம் போன்ற தரைப்பகுதியில் நன்கு விளையக்கூடிய பயிர்களை சாகுபடி செய்தால் குறைவான வருமானம் மட்டுமே கிடைக்கும்.

இதனால் வழக்கமான விவசாயிகளை போல் இல்லாமல், கொடைக்கானல் மலைப்பகுதியில் மட்டுமே விளையும் பட்டர்பீன்ஸ் ரகத்தை சாகுபடி செய்யலாம். குளிர்காலத்தில், காற்றில் ஈரப்பதம் அதிகம் உள்ள சீசன் நேரத்தில் பட்டர்பீன்ஸ் விளையும்.

கொடைக்கானலில் பட்டர்பீன்ஸ் விதைகளை வாங்கி சாகுபடி செய்தால் முதல் சாகுபடியில், 60 சென்ட் கொண்ட ஒரு குழி நிலத்தில் 500 கிலோ மட்டுமே பீன்ஸ் விளையும். ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம், 850 முதல் 900ம் கிலோ மட்டுமே பீன்ஸ் கிடைக்கும்.

அப்படியே தொடர்ந்தால் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 6300 கிலோ வரை (ஒரு குழிக்கு சராசரியாக 3500 முதல் 3800 கிலோ வரை) விளைச்சல் கிடைக்கும்.

பட்டர்பீன்ஸ்க்கு நல்ல விலையும் கிடைக்கும். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் பட்டர் பீன்ஸ் சாகுபடி செய்து முடித்து விட வேண்டும். 80 நாட்கள் பயிரான பட்டர்பீன்ஸ் செடிகளில், நடவு செய்த 65வது நாளில் இருந்து காய்பறிக்க முடியும். தொடர்ந்து 80 நாள் வரை பறிக்கலாம். சில நேரங்களில் விளைச்சல் திறன் அதிகம் இருந்தால், கூடுதலாக ஐந்து நாட்கள் விளையும். 

நல்ல குளிர், ஈரப்பதம் நிறைந்த காற்று, தண்ணீர் வசதி, முறையான பராமரிப்பு தேவைப்படும். பீன்ஸ் செடி, பூ, தண்டு என அனைத்தும் இனிப்புச்சுவை கொண்டவை. இதனால் புழுக்கள் அதிகம் காணப்படும். இதற்கு பயந்து பூச்சி கொல்லி மருந்துகளை அடித்து விடக் கூடாது. மூலிகை, இயற்கை மருந்துகள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இந்த மருந்துகளை தெளிக்க வேண்டும். இதன் மூலம் பூச்சி, புழுக்கள் கட்டுப்படுத்தப்படும்.

ரசாயன மருந்துகளை தெளித்தால் செடிகள் வாடி விடும். ரசாயன உரங்கள் தேவைக்கு ஏற்ப கொடுக்க வேண்டும். நிலத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம்.

 

click me!