வீட்டுத் தோட்டத்தை பாதுகாக்க இப்படியொரு கரைசல் இருக்கு? தெரிஞ்சு பயன்படுத்துங்கள்...

 |  First Published Jun 19, 2018, 1:29 PM IST
Is there a solution to protect the home garden? Use your phone ...



வீட்டுத் தோட்டத்தை பாதுகாக்கும் 'பூண்டு' கரைசல்...

** கத்தரி, தக்காளி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிச் செடிகளில் நோய்த் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதை நோய் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தி விட வேண்டும். இதற்கு மூலிகைப் பூச்சிவிரட்டி முக்கியம். 

Tap to resize

Latest Videos

undefined

** புகையிலை, பூண்டு, பச்சை மிளகாய், வேப்பிலை, நொச்சி இலை இவை ஐந்தையும் சம அளவில் எடுத்து உரலில் போட்டு இடித்து, மூழ்கும் அளவு மாட்டுச் சிறுநீரில் ஊறவைத்து, நன்றாக கொதிக்க வைத்து, பிறகு ஆறவைக்க வேண்டும். 

** 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி வீதம் கலந்து பிஞ்சுப்பருவம் மற்றும் காய்ப்பருவம் ஆகிய இரண்டு பருவங்களில் செடிகளை நனையும்படி தெளிக்கலாம். 

** செடிகளைத் தாக்கும் பூச்சிகளை விரட்டியடிக்கும் ஆற்றல், இந்த புகையிலை + பூண்டுக் கரைசலுக்கு உண்டு.

** நொச்சி, வேம்பு, ஆடுதொடா இலை (ஆடாதோடை), நிலவேம்பு, பப்பாளி இலை என கிள்ளினால், பால் வடியும் ஐந்து இலைகளையும் சம அளவில் சேகரித்து 2 லிட்டர் மாட்டுச்சிறுநீரில் ஒருநாள் முழுக்க ஊறவைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். 

** பிறகு 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி விகிதம் கலந்து, அதிகாலை அல்லது இளமாலை வேளைகளில் செடிகள் மீது தெளிக்க வேண்டும்.

** தொடர்ந்து பிஞ்சுப்பருவம், காய்ப்பருவம் ஆகிய நாட்களில் தெளித்துவர, காய்ப்புழு, அசுவணி, இலைப்பூஞ்சணம் உள்ளிட்ட நோய்கள் அகன்று சீரான மகசூலைப் பெறலாம்.

** இந்த இயற்கை முறை பூச்சிக்கொல்லியை வீட்டுத்தோட்டத்திற்கு பயன்படுத்துவதால், இரசாயன கொல்லி பாதிப்பை தடுக்கலாம்.

click me!