கேள்வி 1:
ராமேஸ்வரம் பகுதியில் ஆடு மற்றும் மாடுகள் மேய்ப்பதற்கு என்று மேய்ச்சல் நிலம் இல்லை. இதனால் அடிக்கடி பக்கத்து வயல்களில் ஆடு சென்று மேயும் போது பிரச்சனை வருகிறது. இதனை தவிர்க்க வீட்டிலேயே வளர்க்கும் வகையில் தீவனங்களை பரிந்துரைக்க முடியுமா?
undefined
பதில்:
ஆடு மற்றும் மாடுகள் பக்கத்து வயல்களில் சென்றும் மேயும் போது பிரச்சனை தான். இதனை தவிர்க்கும் விதமாக வீட்டுக்கு பக்கத்திலேயே அகத்தி செடி வளர்க்கலாம். பூவரம் செடி வளர்க்கலாம். கொடுக்கபுளி நன்றாக சாப்பிடும். அதனை எல்லாம் வளர்த்தால் பிரச்சனை இருக்காது.
ஆட்டை கொட்டில் மாதிரி வைத்தும் வளர்க்கலாம். இவ்வாறு வளர்க்கும் போது குளம்பை சீவி வளர்க்கும் போது பிரச்சனை இருக்காது. தற்போது ஆடுகளுக்கு என்று தீவனங்கள் வந்திருக்கின்றன. அவற்றை வாங்கி ஒரு நாளைக்கு 100 கிராம் என்ற அளவில் பிரித்துக் கொடுங்கள். மேலும் மூன்று மாதங்களுக்கான இடைவெளியில் குடல்புழு நீக்கம் செய்யுங்கள். இதற்கு என்று மருந்து மாத்திரைகள் கால்நடை மருந்துக்கடைகளில் கிடைக்கின்றன.
அவற்றை வாங்கி கொடுங்கள். அதிக ஆடுகள் வளர்க்கும் போது அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. தற்போது விவசாயிகள் ஆடு புழுக்கையை நல்ல உரமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் ஆடு வளர்ப்பிலும் நல்ல லாபம் பெறலாம்.
கேள்வி 2:
பசு குறைமாதத்திலேயே கன்று ஈன்று விடுகிறது. பாலும் குறைவாகவே இருக்கிறது. இதனைத் சரி செய்ய என்ன செய்யலாம்?
பதில்:
பக்கத்தில் இருக்கும் மாடுகளுக்கு ஏதாவது வியாதிகள் இருக்கின்றன என்று பார்க்க வேண்டும். அபார்ஷன் இருக்கிறதா என்று பார்ப்பதும் நல்லது. பக்கத்தில் உள்ள மாடுகள் முட்டி இருந்தால் இருந்தால் கூட பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
கால்நடை மருந்துக்கடைகளில் கால்சிமாஸ்தி என்று திரவ மருந்து இருக்கிறது. அது 5 லிட்டர் அல்லது ஒரு லிட்டர் என அளவில் விற்கிறார்கள். அதனை வாங்கி தினமும் 100 மில்லி கொடுக்கவும். படிப்படியாக பால் உயரும். அடுத்த தடவை சினை ஊசி போடும் போது கற்ப்பை கழுவி ஊசி போட சொல்லுங்கள்.
கேள்வி 3:
மாடு பசும்புல் சாப்பிட்டால் கழிச்சல் ஏற்படுகிறது. இதனை தடுக்க என்ன செய்யலாம்?
பதில்:
ஏற்கனவே குடல் புழு நீக்கம் செய்திருந்தால் சாணத்தை எடுத்து மருத்துவரிடம் காண்பியுங்கள். இல்லை என்றால் குடல்புழு நீக்கத்துக்கான மருத்துவத்தை மேற்கொள்ளுங்கள்.
கேள்வி 4:
கறவை மாட்டுக்கு மடிவீக்கம் இருக்கிறது? இதற்கு என்ன மருத்துவம் செய்யலாம்? எப்படி தவிர்ப்பது?
பதில்:
மாட்டை ஈரத்தில் கட்ட வேண்டாம். கட்டுத்தரையை சுத்தமாக வைத்திருங்கள். பால் கறக்கும் முன்பும், பின்பும் மடியை சுத்தம் செய்யுங்கள். மடி வீக்கம் இருக்கும் போது மஞ்சள், வேப்பம் கொழுந்து, கல் உப்பு மூன்றையும் அரைத்து தடவி விடுங்கள்.
கேள்வி 5:
மாட்டுக்கு வயிறு பூசலாக இருக்கிறது. மூன்று நாளாக மூச்சு வாங்கிறது. என்ன செய்யலாம்?
பதில்:
டிம்பால் என்ற மருந்து இருக்கிறது. தினமும் காலையில் 50 கிராம் என்ற விகிதத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு கொடுங்கள்.