நீர்பாசனம் – ஆதாரம் மற்றும் சேவை…

 |  First Published Dec 19, 2016, 1:06 PM IST



தண்ணீரின் ஆதாரம் மற்றும் தேவை
மழைத் தண்ணீரின் முதன்மை ஆதாரம், ஆனால் மழை வருடம் முழுவதும் வருடந்தோறும் பொழிவதில்லை. எனவே மழை நீரை அணைகள் மூலம் சேமித்துப் பயின் தேவையேற்பின் பாசனத்திற்க உபயோகிக்கலாம்.

அ. மேல்மட்ட நீர் : 

Latest Videos

undefined

மேல் மட்ட நீரானது ஏரி, குளம் மற்றும் அணைகளிலிருந்து வரும் நீராகும்.

 

ஆ. நிலத்தடி நீர் :

 

நீர்ப்பாசனத்தின் குறிக்கோள்கள்

  • நுண்ணூட்டத்திற்கும் மற்றும் பயிரின் வளர்ச்சிக்கும் நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது.
  • மண்ணில் உள்ள அங்ககப் பொருள்களின் மக்கும் நன்மையை துரிதப்படுத்துவதற்கும், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் செயல்திறனை துரிதப்படுத்துவதற்கும் நீர்ப்பாசனம் இன்றியமையாததாகும்.
  • பயிரின் வறட்சி நிலையை அகற்றுவதற்கும்
  • தீமை விளைவிக்கும் உப்பினை நீர்க்கரையோட்டம் மூலம் அகற்றவதற்கும்.
  • மண்ணிலுள்ள தீமை விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கும்
  • மண்ணின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை நிலைப்படுத்துவதற்கும்
  • தரிசு நிலத்தினை பயன்படுத்துவதற்கும்.
  • மண்ணை உழுவதற்கு ஏதுவான சூழ்நிலை ஏற்படுத்துவதற்கு

நீர்ப்பாசனத்தின் தேவை:

 

நிலையில்லாத பருவமழை

  • இந்தியாவில் 80 சதவிகிததம் பருவ காலங்களில் பொழிகிறது. ஆனால் பருவ மழை நிலையில்லாததாக உள்ளது. எனவே பயிர்களின் வளர்ச்சிக்கு நீர்ப்பாசனம் இன்றியமையாததாகும்.

மழை தொடர்ச்சியின்மை

  • மழை தொடர்ச்சியின்மை காரணமாக பயிர்களுக்கு இடைப்பாசனம் தேவைப்படுகிறது.

அதிக மகசூல் தரும் பயிர்களுக்கு

  • அதிக மகசூல் தரும் பயிர்களுக்கு அதிக நீர் தேவைப்படுகிறது.
    எனவே நீர்ப்பாசனம் இன்றியமையாததாகும்.

மண்ணின் நீர் பிடிப்புத்திறன்

  • களிமண் – அதிக  நீர் பிடிப்புத்திறனுடையது.
  • மணற்பாங்கான மண் – குறைந்த நீர்ப்பிடிப்பு திறன் கொண்டது. எனவே அதிக நீர்ப்பாசனத் தேவை ஏற்படுகிறது
click me!