பயிர்களில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் காரணிகளில் பூச்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அவற்றைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைத் தொழில்நுட்பங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள், பூச்சிகளை அழிக்கவல்ல பாக்டீரியா, நச்சுயிரிகள் குறித்த தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படுகின்றன.
இதுபோன்ற பயிற்சியில் பயிர்ச் சாகுபடி செய்யும் உழவர்கள், பண்ணை மகளிர், வீட்டுத் தோட்டக் காய்கறி சாகுபடியாளர்கள், பெண் தொழில்முனைவோர், இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
பயிற்சிக்கான கட்டணமும் குறைவுதான். உங்கள் ஊரில் இருக்கும் பூச்சியியல் துறை, பயிர் பாதுகாப்பு மையத்தின் தலைவரை தொடர்பு கொள்ளலாம்.
நன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்புக் குறித்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு நீங்களும் சாதனை விவசாயி ஆகலாம்.