பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்…

Asianet News Tamil  
Published : May 19, 2017, 12:10 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்…

சுருக்கம்

Insects diseases and control methods that attack crops

பயறு வகைகளைத் தாக்கும் பூச்சிகள்:

பூ வண்டுகள்,

புள்ளிக்காய்ப் புழு,

பச்சைக் காய்ப்புழு,

கதிர் நாவாய்ப்பூச்சி,

நீல வண்ணத்துப் பூச்சி.

கட்டுப்படுத்தும் வழிகள்:

1.. பச்சைக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்த என்.பி.வி கரைசல் ஒரு ஏக்கருக்கு 600 மில்லி தெளிக்கலாம்.

2.. பூ மற்றும் காய் பிடிக்கும் சமயத்தில் 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலை தெளிக்கலாம். 5 கிலோ வேப்பங்கொட்டையை தண்ணீரில் ஒரு நாள் ஊற வைத்து நன்கு அரைத்து அதை ஒரு துணியில் வடிகட்டி 100 லிட்டர் தண்ணீர் சேர்த்து இந்தக் கரைசலை தயார் செய்யலாம்.

3.. பத்து லிட்டர் தண்ணீரில் 7.5 மில்லி இண்டக்சாகார்ப் அல்லது மானோகுரோடோபாஸ்-20 மில்லி என்ற அளவுகளில் ஏதேனும் ஒரு மருந்தை தெளிக்கலாம்.

4.. ஸ்பினோசாட் என்ற மருந்தை ஏக்கருக்கு 65 மில்லி என்ற அளவில் தெளித்தும் பல்வேறு பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

நோய்கள் கட்டுப்பாட்டு முறைகள்:

1.. மஞ்சள் தேமல் நோய், மஞ்சள் கலந்த பழுப்பு நிற இலைகள் உண்டாகி எல்லா இலைகளும் காய்ந்து விடும். மஞ்சள் நிற தேமல் திட்டுகள் இலைகளில் காணப்படும்.

2.. இலைகள் சுருங்கியிருக்கும். இது ஒரு வைரஸ் தாக்குதலால் ஏற்படுகிறது. வெள்ளை ஈக்கள் மூலம் ஒரு செடியிலிருந்து மற்ற செடிகளுக்குப் பரவுகிறது.

3.. நோய் தாக்கிய பயிரை உடனுக்குடன் வேருடன் பிடுங்கி அழிக்க வேண்டும்.

4.. வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு மானோகுரோடோபாஸ் - 200 மில்லி அல்லது டைமீதேயோட் – 200 மில்லி தெளிக்கலாம்.

வேர் அழுகல் நோய்:

வேர்களில் பட்டை உறிந்து நார்போலக் கிழிந்து விடும். தண்டுப் பகுதியில் பூஞ்சான வளர்ச்சி இருக்கும். நோயுற்ற செடிகள் திட்டுத் திட்டாக மடிந்து விடும்.

தடுப்பு முறைகள், விதை நேர்த்தி:

விதைக்கும் முன்பு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டி.விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது 2 கிராம் கார்பன்டாசிம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்பு விதைக்கலாம்.

டி.விரிடி ஏக்கருக்கு 1 கிலோ அல்லது சூடோமோனாஸ் 1 கிலோ ஏதேனும் ஒன்றை தொழு உரத்தடன் கலந்து கடைசி உழவில் அடியுரமாக இடலாம்.

சாம்பல் நோய்:

இது ஒரு பூசணத்தால் உண்டாகிறது. நோயுற்ற இலைகளில் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் வெண்மை நிறத்துக்கள் காணப்படும். பாதிக்கப்பட்ட செடி வளர்ச்சி குன்றி வாடிவிடும். காய்கள், பிஞ்சுகள் சுருங்கி, கருமை நிறமாகி விழுந்துவிடும்.

தடுப்பு முறைகள்:

ஒரு ஏக்கருக்கு கார்பன்டாசிம் – 100 கிராம் அல்லது நனையும் கந்தகம் ஒரு கிலோ இதில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம். இவ்வாறு பயறு வகைப் பயிர்களில் பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்தி நல்ல மகசூல் பெறலாம்.

PREV
click me!

Recommended Stories

Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!
Govt Scheme: ரூ.15,000 வரை மானியம்..! விவசாயிகள் உடனே விண்ணப்பிக்க வேண்டிய திட்டம் இது..!