மாடித் தோட்டம்
நஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் வகையில் வீட்டில் விவசாயம் செய்யத் தேவையான தொழில்நுட்பங்கள் நிறைய இருக்கு.
வீடுகளில் மட்டுமல்லமால் அலுவலகக் கட்டடங்களிலும் தோட்டம் அமைக்கலாம்.
அலுவலகத்தின் மேற்கூரை முழுவதும் செடி, கொடிகள் என பசுமை போர்த்தி அழகு பார்க்கலாம். மேற்கூரையில் தோட்டம் அமைத்து தாவரங்கள் வளர்க்கலாம். ஆம். இது சாத்தியமான ஒன்றுதான்.
தோட்டம் அமைச்சு ரெண்டு வருடத்தில் நீங்களே முழுமையாக காய்கறிகை குறிப்பாக நசற்ற காய்கறிகளை அறுவடை செய்யலாம்.
இயற்கை முறையில் காய்கறிகளை நீங்களே உற்பத்தி செய்து அனைவருக்கும் முன்னோடியாக இருக்கலாம்.
பராமரிப்பு என்பதும் உங்கள் கைவசமே இருக்கும். அதனால் உங்கள் வீடு, அலுவலகம் என எங்கும் நீங்களே தோட்டம் அமைத்து விவசாயி ஆகலாம்.
கிட்டத்தட்ட மாடியில் நீங்கள் பூக்கள் வளர்ப்பது போலதான், காய்கறிகளையும் அதே பராமரிப்போடு வளர்த்தால் நீங்களும் சிறந்த விவசாயி தான். அதைவிட முக்கியம் நோயற்ற வாழ்விற்கு நஞ்சற்ற உணவை நீங்களே உருவாக்கலாம்.