கத்தரியைத் தாக்கும் தண்டு மற்றும் காய் துளைப்பான் பூச்சிகள்
பூச்சித் தாக்குதலின் அறிகுறிகள்
இந்த பூச்சி இளம் பயிரைத் தாக்குவதால் நடவு செய்த 15 முதல் 20 நாட்களில் கத்தரி செடிகளின் குருத்து இலைகள் வாடிக்காய்ந்து தொங்கி விடும். இந்த செடிகளின் தண்டுகளை கிள்ளி உள்ளே பார்த்தால் வெள்ளை நிறப்புழு காணப்படும். இப்புழுவானது காய்கள் வளர்ந்து வரும் சமயத்தில் காய்களைக் குடைந்து சேதப்படுத்துகிறது. இதனால் வளர்ச்சி குன்றி காணப்படும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
** தாக்கப்பட்ட செடிகளின் நுனித் தண்டினை கிள்ளி எறிந்து விடவேண்டும்.
** பாதிக்கப்பட்ட சொத்தை காய்களைப் பறித்து அழித்து விடவேண்டும்.
** தாய்பூச்சிகளை விளக்குப்பொறியை வைத்து கவர்ந்து இழுத்து அழிக்கலாம்.
** முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் 50,000/ எக்டர் என்ற அளவில் நான்கு முறை விட வேண்டும்.
** கார்பரில் 50 சதவீதம் 2 கிராம் /லிட்டர் (அ) நனையும் கந்தகத்தூள் 50 சதவீதம் 2 கிராம்/ லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
** எண்டோசல்பான் 35 இசி 2 மி.லி. / லிட்டருடன் வேப்ப எண்ணெய் 3 சதம் (அ) குயினால்பாஸ் 25 இசி 2 மி.லி./ லிட்டருடன் வேப்ப எண்ணெய் 3 சதம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
** வேப்பங்கொட்டை பருப்புச்சாறு 5 சதம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
** செயற்கை பைரித்திராய்டு பூச்சி கொல்லிகளை தவிர்க்கவும்.