இந்த இயற்கை முறையில் கேழ்வரகு சாகுபடி செய்தால் கூடுதல் லாபம் பெறலாம்...

First Published Apr 7, 2018, 1:10 PM IST
Highlights
In this natural way ragi cultivation can be more profitable ...


கேழ்வரகு சாகுபடி 

** கேழ்வரகை எந்த பருவத்திலும் பயிரிடலாம். எல்லா வகை நிலங்களிலும் பயிரிடலாம். மண்ணின் கார, அமிலத் தன்மை 6.5 முதல் 7.5 கொண்ட நிலங்கள் சிறந்தவை.

** நிலத்தை சட்டிக் கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்யவேண்டும். இப்படி உழுவதால் மண் அரிப்பு தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன், களைகளையும் ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

** வறட்சியை தாங்கி வளர விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விண்ணிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து பயிர்களுக்கு அளிக்கலாம். நாற்றுவிட்டு நடவு செய்தல் நல்லது. நேரடியாக விதைப்பதால் 3 வாரங்களில் குருத்து ஈ தாக்குதல் இருக்கும். இதை எளிதில் கட்டுப்படுத்த முடியாது. 

** நாற்று விட்டு நடவு செய்யும்போது இதன் தாக்குதல் குறையும். மேலும் 10 நாள்களுக்கு முன்பே அறுவடைக்கு வந்துவிடும். வெளிறிய தோற்றம் கொண்ட மற்றும் அடிச்சாம்பல்நோய் தாக்கிய நாற்றுக்களை அகற்றிவிட வேண்டும்.

** ஒரு குத்தில் வாளிப்பான ஒரு நாற்றை மட்டும் நட வேண்டும். 10 சதுர மீட்டருக்கு 150 செடிகள் என்ற எண்ணிக்கையில் பராமரிக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்ய 7.5 சென்ட் தண்ணீர் தேங்காத நிலத்தை தயார் செய்ய வேண்டும்.

** நட்ட 15 மற்றும் 30 நாளில் தழைச்சத்து உரத்தை மேலுரமாக இடவேண்டும். விதைத்தவுடன் ஒரு முறையும், 4-ம் நாளும், 10-ம் நாளும் நிலம் மற்றும் காலநிலைக்கு தகுந்தவாறு நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

** தானியம் காய்ந்து கடினத் தோற்றம் பெற்றவுடன் கதிர்களை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். தானியங்களை விசை கதிரடிகளை கொண்டோ, கல் உருளைகளை பயன்படுத்தியோ, மாடுகளை பிணைக் கட்டியோ பிரித்தெடுக்கலாம்.

click me!