மக்காச்சோளத்தை இந்த முறையில் சாகுபடி செய்தால் லாபம் மட்டுமே 30 ஆயிரம் வரும்...

 
Published : Nov 15, 2017, 12:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
மக்காச்சோளத்தை இந்த முறையில் சாகுபடி செய்தால் லாபம் மட்டுமே 30 ஆயிரம் வரும்...

சுருக்கம்

In this manner the yield of maize is only 30 thousand

விதைப்பு

விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற 90 முதல் 100 நாட்களில் மகத்தான மகசூல் கிடைக்கும் மக்காச்சோளத்தை சாகுபடி செய்யலாம். 

குறுகிய கால பயிரான மக்காச்சோளத்தில் கோ 1, கங்கா, கோ ஹெச் (எம்) 4, கோ ஹெச் (எம்) 5 ஆகிய வீரிய ஒட்டு ரகங்களை பயிரிடலாம். 

விதைமூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்திட ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து 24 மணிநேரம் கழித்து தலா ஒரு பாக்கெட் அசோஸ்பரில்லம், பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர் அந்த விதையை விதைப்பு செய்ய வேண்டும்.

உரம்

மண்ணின் வளத்தை மேம்படுத்த ஏக்கருக்கு 5 டன் தொழு உரமிட வேண்டும். மண்ணாய்வு பரிந்துரைப்படி தேவையறிந்து ரசாயன உரமிட வேண்டும். இல்லையெனில் பொதுப் பரிந்துரையான 54 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து தரவல்ல உரங்களை இட வேண்டும்.
30 கிலோ யூரியா, 156 கிலோ சூப்பர் பாஸ்பேட், 33 கிலோ பொட்டாஷ் உரங்களை அடியரமாக இட வேண்டும். நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையை தவிர்க்க ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்ட உரக்கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து விதைகளை ஊன்றுவதற்கு முன் மேலுரமாக இடவேண்டும்.

பாசனம்

மண்ணின் தன்மைக்கு ஏற்றாற் போல் 10 முதல் 12 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடவேண்டும்.

பூச்சி

குருத்துப்புழு, சாம்பல் வண்டை கட்டுப்படுத்த எண்டோ சல்பான் 4டி அல்லது பாசலோன் 4 கிலோ தூளை 16 கிலோ மணலுடன் கலந்து இலையும், தண்டுப்பகுதியும் சேரும் இடங்களில் உள்ள இடைவெளியில் இடவேண்டும். அசுவினியை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 மில்லி டைமிதோயேட்டை தெளிக்க வேண்டும்.

அறுவடை முறை

ஏக்கருக்கு இறவையில் 2,500 கிலோ முதல் 3,000 கிலோ வரை மகசூல் கிடைக்க வாயப்புள்ளது. ஒரு கிலோ மக்காச்சோளத்தை 10 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் ஏக்கருக்கு 25,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். 
 

PREV
click me!

Recommended Stories

Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!
Business: இப்படியொரு வாய்ப்பா...? இனி விவசாயமும் ஸ்டார்ட்அப் தான்! ரூ.25 லட்சம் வரை அரசு சப்போர்ட்!