மக்காச்சோள சாகுபடி
இறைவை மற்றும மானாவாரி இரண்டுக்குமே ஏற்றது மக்காச்சோளம். இந்த பயிருக்கு அதிக தண்ணீர் தேவையில்லை. குறுகிய காலத்தில் அதிக மகசூல்.
** உற்பத்தி செலவு ரொம்ப கம்மி.
** அதிக உரம் பூச்சி மருந்துக்கு வேலை இல்லை
** ஓரளவு கட்டுபடியாகக்கூடிய விலையும் கிடைக்கும்
** சமச்சீர் உரமேலாண்மை முறையில் இயற்கை ரசாயனம் கலந்து மூன்று ஏக்கரும் இயற்கை முறையில் ஒரு ஏக்கரும் சாகுபடி செய்தால் இயற்கை வழிப்படி கூடுதல் மகசூல் கிடைக்கும் .
** நுட்பம் : மக்காச்சோளம்
** வயது : 110 நாள்
** நிலம் : வடிகால் வசதி உள்ள அனைத்து நிலங்களும்
** சாகுபடி காலம் : இறவையில் வருடம் முழுவதும்
உழவு
சாகுபடி நிலத்தை இரண்டு முறை உழவு செய்து 5 டிராக்டர் அளவு கோழி எருவைக் கொட்டி இறைத்து மீண்டும் ஒரு உழவு செய்து நிலத்தை ஆறப்போட வேண்டும். சொட்டுநீர் பாசணம் பயன்படுத்தும்போது பார் மற்றும் வரப்பு எடுக்கவேண்டியதில்லை. உழவு ஓட்டிய வயலில் அப்படியே நடவு செய்துவிடலாம்.
ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் தேவைப்படும். செடிக்கு செடி ஒரு அடியும், வரிசைக்கு வரிசை ஒரு அடியும் இடைவெளி விட்டு நடவு செய்யவேண்டும். ஒன்றரை அடி லேட்டரல் குழாய்களை ஒன்றரை அடி இடைவெளியில் தண்ணீர் சொட்டுவது போல் அமைக்கவேண்டும். வரிசைக்கு வரிசை 3 அடி இடைவெளியில் இந்தக் குழாய்களை அமைத்தால் போதும்.
பாசனத்துடன் பஞ்சகவ்யா
ஈரத்தைப் பொறுத்து வாரம் இருமுறை பாசனம் செய்யலாம். மொத்த சாகுபடி காலத்தில் அதிகபட்சம் 4 முறை பாசனம் செய்யலாம். விதைத்த 6ஆம் நாள் முளைவிடும் இதற்கு 15ஆம் நாளில் களைஎடுக்கவேண்டும். சொட்டு நீர்ப் பாசன முறையில் பயிருக்கு மட்டுமே பாசனம் நடைபெறுவதால் மற்ற இடங்களில் களை வரும் வாய்ப்பு குறைவு. 15ஆம் நாளில் வடிகட்டிய பஞ்சகவ்யா 200 லிட்டரை பாசன நீர் வழியாகக் கொடுக்கவேண்டும்.
ஏற்கனவே கொட்டிய கோழி எருவின் சத்துக்களை எடுத்து செடிகளுக்குக் கொடுப்பதுடன், பயிர் வளர்வதற்குத் தேவையான கூடுதல் தழைச்சத்தையும் பஞ்சகவ்யா கொடுக்கும். 40 நாளில் ஒரு ஆள் உயரத்திற்கு வளர்ந்து பூக்களோடு நிற்கும். அந்தத் தருணத்தில் மீண்டும் ஒரு முறை 200 லி்டடர் பஞ்சகவ்யாவைப் பாசன நீருடன் கொடுத்தால் பக்கவாட்டில் தோன்றும் கதிர்கள் விரைவான வளர்ச்சி அடைவதுடன் அடிச்சாம்பல் நோயும் தாக்காது
அறுவடை
60 மற்றும் 70ஆம் நாட்களில் கதிர்கள் ஒரே சீராக வளரத் தொடங்கும். 100ஆம் நாளில் கதிர்களை உரித்துப் பார்த்தால் சிவப்பு நிறத்தில் வரிசை கட்டிய தங்கப் பற்கள் பொன்று மணிகள் காணப்படும்.
அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே பாசனத்தை நிறுத்திவிடவேண்டும். 110ஆம் நாளில் தட்டைகள் காய்ந்து நிற்கும். ஆட்களை வி்டடு கதிர்களை மட்டும் ஒடித்து எடுக்கவேண்டும். அளத்து மேட்டில் குவித்து கதிரடிக்கும் எந்திரம் மூலமாக மணிகளைப் பிரித்துக் கொள்ளலாம்.