மழைக் காலங்களில் கால்நடைகளை இப்படியெல்லாம் பராமரித்தால் தான் நோய் தாக்கது...

 |  First Published Mar 2, 2018, 1:26 PM IST
In the rainy season livestock is the only way to cure ...



** மழைக்காலங்களில் இளங்கன்றுகள், ஆட்டுக் குட்டிகள், பன்றிக் குட்டிகள், முயல் குட்டிகளை குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்புகளை அமைக்க வேண்டும்.

** கால்நடைகள் வளர்க்கும் இடத்துக்கு தகுந்தபடி, இந்த பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

** குளிர்ந்த காற்று கால்நடைகளைத் தாக்காத வகையில் பாதுகாக்க வேண்டும். மழையில் கால்நடைகள் நனைவதைத் தவிர்க்க வேண்டும்.

** கால்நடை வளர்ப்புக் கொட்டகைகளை நல்ல காற்றோட்டமாகவும், தரையில் தண்ணீர் தேங்காத வகையில் உலர்ந்த நிலையிலும் வைத்திருக்க வேண்டும்.

** ஆடுகளுக்கு போதுமான இட வசதி அளிக்க வேண்டும். சாணம் மற்றும் கோமியம் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்த பண்ணைகளில் சுகாதாரத்தைப் பேண வேண்டும்.

** கொட்டகை மற்றும் பண்ணைக் கருவிகள் அனைத்தையும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

** 2 சதவீதம் சோடியம் ஹைட்ராக்சைடு, 2 சதவீதம் பார்மால்டிஹைடு கரைசல், 4 சதவீதம் சோடியம் கார்பனேட், 5 சதவீத ஹைட்ரஜன் பெராக்சைடு, 10 சதவீத திரவ அமோனியா, பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம்.

** முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி மருந்துகளை தகுந்த காலங்களில் கால்நடைகளுக்கு வழங்க வேண்டியது அவசியம். குறிப்பாக 6 மாத வயதுக்கு மேல் உள்ள கன்றுக்குட்டிகள், மாடுகளுக்கு சப்பை நோய், தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி போடப்பட வேண்டும்.

** மூன்று வயதுள்ள வெள்ளாடு, செம்மறியாட்டுக் குட்டிகளுக்கும், பெரிய ஆடுகளுக்கும் தொண்டை அடைப்பான், துள்ளுமாரி நோய்க்கான தடுப்பூசி போட வேண்டும்.

** ஆடுகளுக்கு குடற்புழுக்களை நீக்க மருந்துகளை வழங்க வேண்டும். கால்நடைகளை ஒரே இடத்தில் மேயவிடாமல் சுழற்சி முறையில் மேய்க்க செய்வதன் மூலம் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.

** நோய் வந்த கால்நடைகளை இதர கால்நடைகளுடன் சேரமால் பிரித்து முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.

click me!