தமிழகம் வாழை உற்பத்தியில் முன்னனியில் உள்ளது. தமிழகத்தில் பயிரிடப்பப்படும் முக்கிய வாழை ரகங்களில் நேந்திரம் முக்கியமானதாகும்.
கோவை, ஈரோடு, திருச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேந்திரம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. நேந்திரன் முக்கியமாக சிப்ஸ் தயாரிப்பதற்கு பயன்படுகிறது.
நேந்திரன் ஒரு தாருக்கு சராசரி 15 முதல் 20 கிலோ வரை எடை கூடியுள்ளது.
ஏப்ரல் - மே மற்றும் அக்டோபர் – நவம்பர் ஆகிய மாதங்களில் நேந்திரன் நடவு செய்யப்படுகிறது.
இந்த ரகம் காற்று சேதத்தை தாங்கி வளர்வதால் உயர் அடர்த்தி நடவு முறை பின்பற்றப்படுகிறது.
அதிகமான வரத்துகள் ஜனவரி-பிப்ரவரியிலும் மற்றும் குறைந்த வரத்துகள் ஜூலை-ஆகஸ்ட்டிலும் வருகின்றன. தற்போது சந்தைவிலை கிலோ ஒன்றுக்கு ரூ.45 ஆகும்.
இவ்விலை தரம் மற்றும் இதர பண்புகளை பொறுத்து மாறுபடும். வரும் மாதங்களில் அறுவடை விலைகளை பற்றி விவசாயிகள் விழிப்புடன் செயல்பட்ட வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையமானது கோவையில் இயங்கிவரும் உழவர் சந்தையில் கடந்த 15 வருடங்களாக நிலவிய நேந்திரன் விலைகளை ஆராய்ந்தது.
கோவை உழவர் சந்தையில் ஆகஸ்டு மாதத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ 50 முதல் 55 வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் முகவர் மூலம் விற்கும்போது விலை முன்னறிவிப்புகளை விட கிலோ ஒன்றுக்கு குறைவாகவே கிடைக்கும்.