எண்ணெய் வித்துக்களின் அரசி “எள்” சாகுபடி தொழில்நுட்பங்கள்….

 |  First Published Mar 20, 2017, 11:38 AM IST
Queen of oilseeds int cultivation techniques



தமிழகத்தில் 0.74 லட்சம் எக்டரில் எள் சாகுபடி செய்யப்பட்டு 0.32 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு எக்டருக்கு 433 கிலோ மட்டும் விளைச்சலாக எடுக்கப்படுகிறது.

இப்பயிர் பெரும்பாலும் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுவதும், வளம் குறைந்த நிலப்பகுதிகளில் தேவையான பயிர் மேலாண்மையின்றியும் சாகுபடி செய்யப்படுவதால் எள் விளைச்சல் தமிழகத்தில் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது குறைகிறது.  

Tap to resize

Latest Videos

எள்ளுக்கு நிலவும் சந்தை வாய்ப்பை பயன்படுத்தி எள் உற்பத்தியை அதிகப்படுத்தினால் எள் சாகுபடியை அதிக லாபத்துடன் செய்ய முடியும்.

எள் பயிரிட நிலம் தயாரித்தலுக்கு மணற்பாங்கான வண்டல் மண், செம்மண், கருவண்டல் நிலங்கள் ஏற்றவை.

நிலத்தை டிராக்டர் கலப்பை, இரும்பு கலப்பை, நாட்டுக்கலப்பை உழ வேண்டும்.

சிறுவிதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கடினமான கட்டிகளை உடைக்க உளிக்கலப்பையை கொண்டு உழ வேண்டும்.

பின் 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்கழிவு போட வேண்டும்.

இறவை எள் சாகுபடிக்கு கிடைக்கும் நீர் நிலத்தின் சரிவை பொறுத்து 10 சதுரமீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவுக்கு படுக்கையை  சமன்படுத்த வேண்டும்.

இரண்டு கிலோ விதையுடன் 4 கிராம் திரம் அல்லது கார்பெண்டாசிம் மருந்தை கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். இதை பூஞ்சாணக்கொல்லியுடன் கலக்கக் கூடாது.  

ஐந்து கிலோ விதையுடன் 20 கிலோ மணல் கலந்து நிலத்தின் மேற்பரப்பில் சீராக தூவ வேண்டும்.

விதைத்த 15-ம் நாள் செடிக்கு செடி 15 செ.மீ இடைவெளி விட்டு செடிகளை கலைத்துவிட வேண்டும்.

பின் 30-ஆம் நாள் செடிக்கு செடி 30 செ.மீ இடைவெளி விட்டு மீண்டும் ஒருமுறை கலைத்து விட வேண்டும்.

மக்கிய தொழு உரம் கடைசி உழவி்ற்கு முன்பு இட வேண்டும். மண்பரிசோதனை அடிப்படையில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்தை இட வேண்டும்.

களைக்கொல்லி இட்டபின் 30-35 வது நாளில் ஒரு களை எடுப்பது அவசியம். களைக்கொல்லி இடாவிட்டால் விதைத்த 15—ம் நாட்கள் கழித்து ஒரு கைக்களையும், 35 நாட்கள் கழித்து இரண்டாவது கைக்களையும் எடுத்து களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

எள்ளிற்கு மண்ணின் தன்மை, பருவகாலம் ஆகியவற்றைப் பொறுத்து 5 அல்லது 6 முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

பூ பூக்கும் பருவம், காய் பிடித்து முற்றும் பருவத்தில் நீர் பாய்ச்ச வேண்டும்.

எள்ளைக் காய்த்துளைப்பான், எள் காய் ஈ போன்ற பூச்சிகளும், சேமிப்பில் அரிசிக்கூண் வண்டு, அரிசி அந்துப்பூச்சி போன்றவையும் தாக்கும். அதே போல், சாம்பல் நோய், ஆல்டர் நேரியா, இலைக்கருகல் நோய், செர்க்கோஸ்போரா புள்ளி நோய், வேரழுகல் நோய் போன்றவை தாக்கும்.

இவற்றைக் கட்டுப்படுத்த தகுந்த மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும்.  

click me!