தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்தினால் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் லாபம் பெறலாம்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும், சோளம், கம்பு, மணிலா போன்ற பயிர்களை பயிரிடுவர்.
கடந்த சில ஆண்டுகளாக, உரிய மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகளும் வற்றியதால் விவசாயம் செய்வதே, பெரும் சவாலாக இருந்தது.
இச்சூழலில், குறைந்த நீரில் தெளிப்பு நீர்ப்பாசனத்தின் மூலம், பயிர்களை சாகுபடி செய்து லாபம் பெறலாம் என்பதை, வேளாண் பொறியியல் துறை வல்லுனர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, தெளிப்புநீர்ப் பாசனத்திற்கான கருவிகளை, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருவதும் தெரிந்தது.
இதற்காக விண்ணப்பித்து மானியத்தில், தெளிப்புநீர்ப் பாசனத்திற்கான ரெயின்கன் கருவியையும், 30 மீட்டர் நீளமுள்ள டியூப் பைப்பையும், வேளாண் பொறியியல் வல்லுனர்கள் வழங்குவர்; மேலும், கருவியை பொருத்துவது குறித்த பயிற்சியையும் அளிப்பர்.
வயலில் உள்ள மோட்டார் பைப்பில், டியூப் பைப்பை இணைத்து, அதனுடன் ரெயின் கன் கருவியின் பைப்பை இணைத்து, மோட்டாரை ஆன் செய்தால், நிலம் முழுவதும் சுழற்சி முறையில், 64 மீ., பரப்பளவிற்கு சாரல் மழை பொழிவது போன்று, நீர் தெளிக்கப்படும்.
ரெயின் கன் கருவியை, சுலபமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்பதால், அதிகபட்சமாக மூன்று முதல், நான்கு மணி நேரத்திற்குள், ஒரு ஏக்கரில் பயிர்களுக்கு நீர் அளித்து விடலாம்.
கடந்த பருவத்தில், உளுந்து மற்றும் எள் பயிரை தெளிப்பு நீர்ப் பாசனத்தில் பயிர் செய்திருந்த போது, அதிகபட்சமாக, நான்கு முறை நீர் அளித்தாலே போதும்.
விதைப்புக்கு முன் ஒருமுறையும், அதன் பின், 15 நாட்கள் இடைவெளியிலும், பயிர்களுக்கு நீர் அளிக்கலாம்.
வழக்கமாக பெரும் மகசூலைவிட தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் பயிர் செய்தபோது, அதிக அளவில் மகசூல் கிடைக்கும்.
மணிலா, உளுந்து, எள் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் மண், 2 அங்குலம் உயரத்திற்கு ஈரப்பதத்துடன் இருந்தால், பயிர்களைப் பாதுகாத்து விடலாம்.
தெளிப்பு நீர் பாசன முறையில், 5 எச்.பி., திறன் கொண்ட மோட்டார் மூலம், கருவியைப் பயன்படுத்தி, வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், விவசாயிகள் லாபம் பெறலாம்.