1.. ஒரு டம்ளர் பாலில் துளசி சேர்த்து குடித்து வந்தால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், உடலின் வெப்பதை குறைத்து, காய்ச்சலை விரைவாக குறைக்கிறது.
2.. சூடான பாலில் துளசி கலந்து குடிப்பதால், அது தொண்டை கரகரப்பு, சளி, வறட்டு இருமல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
3.. சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால், அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, பதட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை குறைத்து, நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
4.. துளசி, பால் கலந்த பானத்தில் உள்ள சிறந்த டையூரிடிக், யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதையும், அதை கரைக்கவும் உதவுகிறது.
5.. துளசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்களின் உருவாக்கத்தை தடுக்க உதவுகிறது.
6. துளசியில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடன்டுகள் மற்றும் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள், இதயத்தின் நலனை ஊக்குவித்து, இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் நன்றாக சென்று வருவதற்கு உதவுகிறது.