மண்வளம் சரியாக இல்லாத தோட்டதில் கூட மீன் வளர்த்து நல்ல லாபம் பார்க்கலாம். 10 ஏக்கர் நிலமிருந்தும் விளைச்சல் இல்லை என்று புலம்புபவர்களுக்கு இந்த கட்டுரை.
90 அடி நீளம், 35 அடி அகலம்ங்கிற கணக்குல 6 குளங்களை வெட்டி ரெண்டு குளத்துல விரால் வளர்க்கலாம்.
ஒரு குளத்துக்கு 400 ஜிலேபி கெண்டைனு ரெண்டு குளத்துலயும் விட்டால் அவை ஒரு மாத காலத்தில் ஓரளவு வளந்துடும்.
குளத்துக்கு 400 விரால் குஞ்சுனு ரெண்டு குளத்துலயும் 800 குஞ்சுகளை விடணும். ஜிலேபி கெண்டை மீன், தன்னோட முட்டைகளை வாயிலயே அடைகாத்து, 18 முதல் 21 நாள் இடைவெளியில குஞ்சுகளா துப்பிக்கிட்டே இருக்கும். இந்த ஜிலேபி குஞ்சுகளை சாப்பிட்டே விரால் வளர்ந்துடும். இன்னும் 8 மாசம் கழிச்சுதான் எவ்வளவு விரால் கிடைக்கும்னு தெரியும்.
அந்த ரெண்டு குளம் போக, மத்த நாலு குளத்துலயும் மிர்கால், கட்லா, ரோகு மீன்களை ஒவ்வொரு குளத்துக்கும் 400 குஞ்சுகள்ன்ற கணக்குல விடலாம்.
தினமும் ஒரு மணி நேரம் தீவனம் வெச்சு, குளங்களை ஒரு சுத்து சுற்றி வரணும். அவ்வளவுதான், வேற எந்த ஜோலியும் இல்லை.
ஒவ்வொரு குளத்துக்கும் தினமும் ஒரு கிலோ தவிடு, அரை கிலோ கடலைப் பிண்ணாக்கு, 10 கிலோ சாணம் போடணும். கே.வி.கே. யிலிருந்து கிடைக்கும் குருணைத் தீவனத்தை கொஞ்சம் சேத்துக்கலாம்.
எந்தப் பிரச்சனையும் இல்லாம மீன்கள் நல்லா வளரும். விரால் மீனுக்கு நல்ல கிராக்கி இருக்கு. கிலோ 350 ரூபாய்க்கு வாங்குவாங்க. குளத்துல விட்டிருக்குற 800 குஞ்சுகளில் இழப்பு போக, 300 கிலோ கிடைச்சாலும் 75 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
மத்த குளங்கள்ல கிடைக்குற வருமானம், செலவு கணக்குல போனாலும், விரால் மூலமா வர்ற வருமானம் மொத்தமும் லாபமா கிடைச்சுடும்.
எதுக்கும் உதவாத மண்ணை வெச்சுக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியலையேனு கஷ்டப்படாம குளம் வெட்டி விரால் வளர்த்து லாபம் பார்க்கலாம்.