மண்புழு உரத் தயாரிப்பு
இயற்கை விவசாய ஆர்வலர்கள் மண்புழு உரங்களையும், மண்புழுக்களையும் வாங்க ஆவலாக இருந்தும், இத்தயாரிப்பு குறைந்த அளவிலேயே உள்ளது.
தோட்டம், காடு இருக்கிற விவசாயிகள் விவசாயம் செய்துகொண்டே சைடு பிஸினஸாக இந்த தொழிலை செய்தால் மகத்தான வருமானம் பார்க்கலாம். தவிர, குறைந்தளவு முதலீட்டில் புதிதாக தொழில் செய்ய நினைப்பவர்களும் இத்தொழிலில் இறங்கலாம்.
இப்போது ஒரு கிலோ மண் புழு 450 ரூபாய் என்கிற அளவிலும் மண்புழு உரம் கிலோ எட்டிலிருந்து பத்து ரூபாய் வரையும் விற்பனை ஆகிறது.
மலேசியா, சிங்கப்பூர், சௌதி அரேபியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மண்புழு உரம் தயாரிக்க நிழலான இடம் தேவை.
சிறிய அளவில் செய்கிறவர்கள் மரத்து நிழலில்கூட மண் புழு படுக்கையை அமைக்கலாம். ஆனால், கொஞ்சம் பெரிய அளவில் செய்ய நினைப்பவர்கள் அதற்கென தனியாக ஷெட் போடுவது அவசியம்.
மண் புழு உரம் பதப்படுத்தும்போது, எந்நேரமும் அது ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். உரம் தயாரிக்கிற இடம் இருட்டாக இருப்பது நல்லது. மண்புழு உரம் தயாரிக்க பெரிதாகப் பாடுபட வேண்டியதில்லை என்றாலும், சரியானபடி பராமரித்தாலே போதும்.