நாட்டுக்கோழி வளர்ப்பில் பண்ணையை எப்படி அமைப்பது? இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க…

 |  First Published Sep 30, 2017, 12:39 PM IST
How to set up a farm in rural horticulture? You can read this ...



இன்றைய நிலையில் ஆர்கானிக், ஆர்கானிக் என்று மக்கள் இயற்கை  உணவு முறைகளை  நாடி செல்லும் நிலையில், இயற்கையாக கிடைக்கும்  நாட்டு கோழிகளுக்கு இனி வரும் காலங்களில் நல்ல கிராக்கி  உண்டு என்பதை மக்கள் உணர்ந்துள்ளானர்.

பிராய்லர் கோழிகள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்த உண்மைகள் அறிய ஆரம்பித்த பிறகு நாட்டுக் கோழிக்கான மௌசு அதிகரித்துள்ளது.

Tap to resize

Latest Videos

நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் முறை

நாட்டு கோழிகள் இயல்பாகவே மிகவும் பலமானவை மழை, காற்று, அதிக வெயில்  போன்றவற்றை எளிதாக தாங்கும் குணம் உள்ளவை. எனவே இதற்கு ப்ராய்லர் கோழிகளுக்கு அமைப்பதை போன்ற கொட்டகை அமைப்பது தேவை அற்றது.

திறந்த வெளியில் கம்பி வேலி அமைத்து எளிதாக  வளர்க்கலாம், இதற்கு "டயமன்ட் கிரில்" என்ற மிக சிறிய ஓட்டைகள் உள்ள வேலிகள் அமைப்பதன் மூலம் கோழி குஞ்சுகள் வெளியே செல்வதை தடுக்க முடியும்.

நாட்டு கோழி தேடி பாம்புகள் வருவது வாடிக்கை. அதனால், வேலியின் கிழே முழுவது வலை அடித்து விடுவதன் மூலம்  பாம்புகளை நாம் தடுக்க முடியும்.

பொதுவாக ஒரு ஏக்கருக்கு 2000  கோழிகள் வரை எளிதாக வளர்க்க முடியும், இதற்கு கொட்டகை என்று பெரிதாக ஒன்றும் தேவை இல்லை, மழை,வெயில் போன்றவற்றில் இருந்து ஒதுங்க சிறிய செலவிலான கூரை  போன்ற கொட்டகை போதுமானது.

 

click me!