காசநோய்
இந்நோய் மைக்கோபாக்டீரியம் ட்யூபெர்குலோசிஸ் என்னும் ஒரு வகை நுண்ணுயிர்க் கிருமியால் ஏற்படுகிறது. இக்கிருமிகள் மாடுகளைப் பாதிப்பதோடு மனிதர்களையும் பாதிக்கின்றன.
இந்நோய்க் கிருமிகள் நோயுற்ற பசுவின் பாலை அருந்துவதாலும், மாட்டோடு நெருங்கிப் பராமரிப்பதாலும் மனிதர்களுக்குப் பரவுகின்றன. ஆகவே இந்நோயைக் குறித்து நாம் எச்சரிக்ககையாய் இருக்கவேண்டும்.
நோய் அறிகுறிகள்
பாதிக்கப்பட்ட மாடுகளில் விட்டு விட்டு லேசான காய்ச்சல் இருக்கும்.
மாடு மிகவும் இளைத்து மெலிந்து காணப்படும். தொடர்ந்து உடல் எடை குறையும்.
இருமல், மூச்சுத் திணறல் ஏற்படும்.
மார்பிலுள்ள நிணநீர் முடிச்சு வீங்கி விடுவதால் அடிக்கடி வயிற்று உப்புசம் ஏற்படும்.
குடற்பகுதி பாதிக்கப்படுமானால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
மடி பாதிக்கப்பட்டால் மடியில் கட்டிகள் ஏற்பட்டு, பாலின் தன்மை கெட்டுப்போகும்.
பாதிக்கப்பட்ட மாடுகள், நோய்க் கண்ட சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை துன்பப்பட்டு இறந்து விடும்.
தடுப்பு முறை
தொடர்ந்து இளைத்துக்கொண்டே வரும் மாடுகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தி காச நோய் உள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும்.
நோயுற்ற மாடுகளைப் பிரித்துத் தனிமைப்படுத்தவேண்டும்.
ஆறுமாதத்திற்கு ஒரு முறை மாடுகளை காசநோய்ப் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும்.
பாலை, கொதிக்க வைத்து அருந்தவேண்டும்.
சுற்றுப்புறச் சுகாதாரம் நன்கு பராமரிக்கப்படவேண்டும்.
மாடுகளுக்குத் தேவையான அளவு, தரமான தீவனம் அளிக்கவேண்டும். போதுமான அளவு பசுந்தீவனம் கொடுக்கவேண்டும். காற்றோட்ட வசதி, நல்ல தீவனம் இவை இரண்டும் இந்நோய்த் தடுப்பில் பெரிதும் உதவுகின்றன. கன்று பிறந்த 10 நாட்களுக்குள் பி.சி.ஜி தடுப்பூசி போடவேண்டும்.
பாதிக்கப்பட்ட மாடுகள், நோய்க்கண்ட சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை துன்பப்பட்டு இறந்து விடும்.