1.. மரநாக்கு நோய்
undefined
இது உருண்டை வடிவ ஆக்டினோபேசில்லஸ் லிக்னீரிசி என்னும் பாக்டீரியாவினால் பரவுகிறது. இந்த பாக்டீரியாவானது நாக்கின் மடிப்பு மற்றும் காயங்கள் வழியே திசுக்களுக்குள் உட்புகுகிறது. ஏதேனும் கடினமான தண்டு அல்லது தீவனம் கொடுக்கும் போது அது நாக்கில் காயம் ஏற்படுத்தி இது போன்ற பாக்டீரியங்கள் நுழைய ஏதுவாகிறது.
இது நாக்கின் மென்மையான திசுக்களைப் பாதிக்கிறது. இதன் பாதிப்பு உடனடியாக நாக்கு தடித்தல் மூலம் வெளிப்படுகிறது. தடித்த நாக்கில் வலி இருக்கும். இது உள்ளே சற்று வளர்வதால் மாடுகளால் இயல்பாக அசை போட முடியாது. நாக்கில் புண்கள் தோன்றுவதால் எதுவும் உண்ணவோ, அருந்தவோ இயலாது. இது கவனித்தால் எளிதில் குணப்படுத்தக்கூடியதே.
சிகிச்சையின் அறிகுறி தெரிந்த உடனே ஆரம்பித்தால் நன்று. அயோடின் மற்றும் டெட்ராசைக்ளின் மருந்துகள் அளிக்க வேண்டும். நோய் முத்திவிட்டால் அறுவை சிகிச்சையும், தினசரி அயோடின் தடவ வேண்டியும் இருக்கும்.
2.. மாட்டம்மை
இந்நோய் கண்ட மாடுகளில் முதலில் லேசான காய்ச்சல் இருக்கும். பின்னர் மடியிலும், காம்புகளிலும் கொப்புளங்கள் ஆரம்பித்து. கடைசியில் சுருங்கி, கருகி, உதிர்ந்து விடுகின்றன. பால் கறக்கும் போது கொப்புளங்கள் இரணமாகி மாடுகளுக்கு வேதனையை அளிக்கும்.
இந்நோயோடு நுண்ணுயிர்க் கிருமிகளும் சேர்ந்து தாக்காமல் இருந்தால், மாட்டம்மை நோய் இரண்டு அல்லது மூன்று நாட்களில் குறைந்து விடும்.
பால் கறக்கும் தொழுவத்தைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். பால் கறக்கும் முன் பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த தண்ணீரில் மடியினைக் கழுவிய பின்னர் தினமும் பால் கறக்க வேண்டும்
கொப்புளங்களுக்குக் கிருமி நாசினி மருந்து தடவி சிகிச்சை அளிக்கவேண்டும்.