1.. வெளிர் சிவப்புக் கண்
பெயருக்கேற்றார் போல் இந்நோய் பாதித்த மாடுகளின் கண்கள் வெளிர் சிவப்பு நிறத்தில் மாறிவிடும். இது உயிர்க்கொல்லி நோய் இல்லாவிடிலும் பாதிப்பு பொருளாதார ரீதியில் அதிகம்.
கண் விழியின் கார்னியா திரை மூடப்படுவதாலும், நிறைய நீர் கண்களிலிருந்து வடிவதாலும் கண்ணைத் திறக்க முடியாமல் மூடிக்கொள்ளும். ஒரு கண்ணோ «øÄÐ இரண்டுமோ பாதிக்கப்படலாம்.
கார்னியாவின் நடுவே வட்டவடிவமான அரிக்கப்ப்டட் பகுதி உருவாவதால் எரிச்சல் இருக்கும். கண் மூடிக்கொள்வதால் சரியான தீவனமன்றி எடை குறையும். 4-8 வாரங்கள் அல்லது அதற்கு மேலும் இந்நிலை நீடிக்கும் சரியான சிகிச்சையளித்துக் குணமடைய ஆரம்பித்தால் இதில் உருவான வெளிறிய பகுதி மறைந்து விடும்.
பாதிப்பு அதிகமானால் இவ்வெளிர்நிறம் சரியாகக் குணமடையாமல் அடிக்கடி பார்வையைத் தொந்தரவு செய்யும். மேலும் பாதிப்பு அதிகரித்து நோய் எல்லா கார்னியாவின் எல்லா அடுக்குகளையும் பாதித்தால் கருவிழிறைச் சுற்றியுள்ள திரவம் வற்றிவிடும். இது நிரந்தர பார்வை இழப்புக்குக் காரணமாகும்.
இந்நோய் பல வகைகளில் பரவுவதால் நல்ல தடுப்பு முறை அவசியம். ஈக்கள் மற்றும் கொசுக்களைக் கட்டுப்படுத்துதல் வேண்டும். காதைச் சூழ்ந்த உறைகள் பிளாஸ்டிக் உறை போன்றவை அணிவிக்கலாம். பொடித்தூவுதல், மருந்து தெளித்தல் மூலமாகவும் இவைகளைக் கட்டுப்படுத்தலாம்.
மேய்ச்சலின் போது உயர வளர்ந்த புற்கள், விதைகள் மாடுகளின் கண்களில் பட்டு எரிச்சல் அடையச் செய்யும். எனவே புற்களை அவ்வப்போது வெட்டிவிடவேண்டும்.
சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் காலநடைக்கன்றுகளை பாதிக்கலாம். எனவே எப்போதும் நிழலில் வளர்ப்பதே சிறந்தது.
சரியான மருந்து கிருமி நாசினியை அவ்வப்போது அளித்தல் நல்ல பலனைக் கொடுக்கும்.