ஊட்டச்சத்துமிக்க கரைசல் தயாரிப்பது எப்படி?

First Published Nov 29, 2016, 2:34 PM IST
Highlights


பயறு வகைகளில் புரதச்சத்து (20-24 சதம்) இருக்கின்றது. புரதச்சத்தின் மாற்றத்திற்கு மணிச்சத்து அவசியம்.

மணிச்சத்து மண்ணிலிருந்து கிடைப்பதை விட இலை வழியாக எளிதாக கிடைக்கிறது.

மேலும் பயிர்கள் பூக்கும் பருவத்திற்குப் பிறகு வேர்களில் ஊட்டச்சத்து எடுக்கும் தன்மை குறைந்து விடும்.

இத்தகைய நிலை நெல்தரிசு பயிர்களில் காணப்படுகிறது.

ஆகையால் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து கொண்ட டிஏபி கரைசலைத் தெளிப்பதன்

மூலம் இலை வழியாக இவை உள்ளே சென்று பயனளிக்கிறது.

பூக்கள் பூத்தபின் இலைகளில் உற்பத்தியாகும் மாவுச்சத்து விதையில் சேமிக்கப்படுகிறது.

யூரியா வழியாக கிடைக்கும். தழைச்சத்து இலைகளைப் பச்சையாக வைத்திருந்து அதிக மாவுச்சத்து உற்பத்திக்கு உதவி செய்கிறது.

பொட்டாஷ் உரம் இடுவதால் பயிரில் பூச்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

மணியின் எடையைக் கூட்டுகிறது. பிளோனோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி பூ பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க அதிக காய்கள் பிடிக்க உதவுகிறது.
டிஏபி, யூரியா, பொட்டாஷ் மற்றும் பிளோனோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி ஆகியவற்றின் கலவை தயார் செய்து தெளிப்பதன் மூலம் கூடுதல் விளைச்சலையும் லாபத்தையும் பெறலாம்.

இதற்கு ஒரு ஏக்கருக்கு தேவையான டிஏபி 4 கிலோ, யூரியா 2 கிலோ, பொட்டாஷ் 1 கிலோ மற்றும் பிளோனோபிக்ஸ் 185 மில்லி ஆகியவை ஆகும்.

அவற்றுள் டிஏபி உரத்தை முதல் நாள் மாலையில் 10 லிட்டர் நீரில் ஊறவைத்து மறுநாள்

அதன் தெளிந்த நீருடன் 190 லிட்டர் நல்ல நீர், யூரியா, பொட்டாஷ் பிளோனோபிக்ஸ் ஆகியவற்றை கரைத்து 200 லிட்டர் தெளிப்புக் கரைசல் தயார் செய்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு ஒரு ஏக்கரில் தெளிக்க வேண்டும்.

விதைத்த 25-30 நாளில் (பூக்கும் தருணத்திலும்) பின்பு 15 நாட்கள் கழித்தும் (40-45 நாள்) இருமுறை தெளிக்க வேண்டும். இக்கரைசலைத் தெளிக்க சரியான நேரம் மாலைப்பொழுதுதான்.

ஏனென்றால் கரைசல் இலைப்பரப்பில் இருக்கும் இலைத்துளை வழியாக உள்ளே செல்ல முடியும். கரைசல் காய்ந்து விட்டால் உள்ளே செல்லாது.

எனவே வெயில் நேரத்தில் தெளிக்கக் கூடாது.

அதேபோல் இலைகளில் அடிப்பக்கம் கரைசல் நன்றாகப் பரவ வேண்டும் என்பதற்காகக் கைத்தெளிப்பான் மூலம் தெளிப்பது நல்லது.

தேவைக்கு அதிகமான டிஏபியை அதாவது இரண்டு சதத்திற்கு மிக அதிகமாக இருக்குமாறு கரைத்து உபயோகித்ததால் இலைகள் கருகிவிடும்.

ஆகையால் பரிந்துரை செய்யப்பட்ட அளவை மட்டும் உபயோகிக்க வேண்டும்.

click me!