மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசலை எப்படி தயாரிப்பது? எப்படி பயன்படுத்துவது?

First Published Aug 10, 2017, 12:44 PM IST
Highlights
How to prepare an enhanced amirtha solution? How to use?


தேவையான பொருட்கள்:

1. 30 கிலோ மாட்டு சாணம். சாணம் இருபத்திநான்கு மணி நேரத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும். பசு மாடு மற்றும் காலை மாட்டு சாணம் உபயோக படுத்தலாம்.

2. 10 - 15 லிட்டர் மாட்டு கோமியம். நாட்பட்ட கோமியம் கிடைத்தால் மிகவும் நன்று. 4-5 நாட்கள் கோமியம் சேகரித்து அதனை உபயோக படுத்தலாம்.

3. 3 முதல் 5 கிலோ கடலை புண்ணாக்கு. நன்கு தூளாக்கப்பட்டது வேண்டும் 

4. 3 முதல் 5 கிலோ வெல்லம் 

5. 1 லிட்டர் தயிர். மாட்டு தயிர் பயன்படுத்தவும். அரைத்த பால் தயிரை தவிர்க்கவும். 

6. 5 பப்பாளி பழங்கள். நாட்டு பழங்களை உபயோகப்படுத்துவது நன்று.

7. அரசாணி காய் ஒன்று. சில மாவட்டங்களில் மஞ்சள் பூசணிக்காய் என்று அழைப்பார்கள். ஒரு சில ஊர்களில் பரங்கிக்காய் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த கரைசலை செய்வதற்கு தண்ணீர் பேரல் உகந்தது. பேரல் இல்லாதவர்கள் தங்களின் வசதிக்கேற்ப எதை வேண்டுமானாலும் உபயோக படுத்தலாம்.

செய்முறை:

முதலில் பசு மாட்டு சாணத்தையும் கோமியத்தையும் கூழாக (நன்றாக) கரைத்து கொள்ளுங்கள். கடலை புண்ணாக்கை நன்றாக இடித்து கலந்து கொள்ளுங்கள். வெல்லத்தை நன்றாக இடித்து அதனையும் கலந்து கொள்ளுங்கள்.

இத்துடன் தயிர் மற்றும் பப்பாளி பழத்தை கலந்து கொள்ளவும். அரசாணி காய் ( பூசணி அல்லது பரங்கிக்காய் ) கிடைத்தால் அதனை செக்கில் நன்றாக இடித்து கூழ் போல மாற்றி கலந்து கொள்ளவும்.

இந்த கலவையுடன் 100 லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ளவும். தங்களால் முடியும் என்றால், உயிர் உரங்களான அசோஸ் பயிரில்லம், பஸ்மோ பாக்டீரியா, ரைசோபியம், பொட்டாஷ் பாக்டீரியா, வாம் லீகுவிட் இவை அணைத்தும் தலா 100ml கலந்து கொள்ளுங்கள் (இது அவசியம் கிடையாது).

இவைகளை உபயோக படுத்துவதால் நன்மை தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மூன்று நாட்கள் கழித்து ஒரு குச்சியை வைத்து நன்றாக கலக்கிக்கொள்ளவும். பிறகு துணியை வைத்து பேரல் வாயினை நன்றாக கட்டி வைத்து விடவும்.

ஈக்கள் மற்றும் கொசுக்கள் உள்ளேய சென்று முட்டை இடுவதை இது தடுக்கும். தேவை பட்டாள் மீன் அமிலம் 1 லிட்டர் ஊற்றிக்கொள்ளலாம் (இது அவசியம் கிடையாது). இந்த கரைசலை 7 நாட்கள் ஊற வைக்க வேண்டும். இந்த 7 நாட்களில் வேதியல் மாற்றங்கள் நிகழ்ந்து பயிர்களுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உண்டாகி இருக்கும்.

பயன்படுத்தும் முறை:

பாசன நீருடன் கலந்து பயிர்களுக்கு விடலாம். சொட்டு நீர் பாசன முறையிலும் கலந்து பயிர்களுக்கு விடலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள அணைத்தும் 1 ஏக்கர் பயிர்களுக்கான அளவு. தங்களின் நிலத்தின் அளவை பொறுத்து இடு பொருட்களின் அளவுகளை கூட்டியோ, குறைத்தோ தயாரிக்கலாம்.

click me!