துவரை சாகுபடியில் பயிர் மேலாண்மை
நிலம் தயார் செய்தல்
undefined
நிலத்தை நன்கு ஆழமாக உழுது ஏக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் அளிக்கவும் அல்லது கடைசி உழவிற்குப் பின் மட்கிய தேங்காய்நார்க் கழிவை அளிக்கவும் வரப்பு மற்றும் பள்ளம் அமைக்கவும்.
விதையும் விதைப்பும்
விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒருகிலோ விதைக்கு கார்பென்டாசிம் திரம் 2 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு ட்ரைக்கோ டெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனஸ் புளுரசன்ஸ் 10 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
உயிர் உரங்களைக் கொண்டு விதை நேர்த்தி செய்தல்
பூஞ்சைக் கொல்லி (அல்லது) உயிர்க் கட்டுப்பாட்டுக்காரணி கொண்டு விதை நேர்த்தி செய்தபின் 24 மணிநேரம் கழித்து மீண்டும் பாக்டீரியா பயிர் வளர்ப்பு கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
ஒரு எக்டருக்கு தேவையான விதையை விதை நேர்த்தி செய்ய ரைசோபியல் கல்சர் சி.ஆர்.ஆர் / சி.பி.ஆர், பாஸ்போ பாக்டீரியா (பேசில்லஸ் மெகாடீரியம்) மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தயாரித்த பி.ஜி.பி.ஆர் (சூடோமோனஸ் எஸ.பி) ஒரு பாக்கெட் (200கி) அளிக்கவும். செம்மண்ணாக இருந்தால் வி.பி.ஆர் 1 ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும்.
விதை நேர்த்தி செய்வதற்கு மட்டும் ரைசோபியம் உடன் சேர்ப்பானாக அரிசி கஞ்சி சேர்க்க வேண்டும். பி.எஸ்.பி மற்றும் பி.ஜி.பி.ஆர். கொண்டு விதை நேர்த்தி செய்யாவிட்டால் பாஸ்போ பாக்டீரியா 10 பாக்கெட் (2 கிகி) (பேசில்லஸ் மெகாடீரியம்) மற்றும் (2கிகி) பி.ஜி.பி.ஆர் (சூடோமோனஸ் எஸ.பி) உடன் 25கிகி தொழுவுரம் மற்றும் 25 கிகி மண் கலந்து விதைப்பதற்கு முன் அளிக்கவும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
மானாவாரிப் பயிராக இருந்தால் 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து. 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை ஒரு எக்டருக்கு அடி உரமாக இடவேண்டும்.
இறவைப் பயிராக இருந்தால் 25 தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும். அடியுரமாக 25 கிலோ ஜிங்சல்பேட் இடவேண்டும்.
பயறு வகை பயிர்களின் உயிர்ம ஆதரங்கள் கொண்டு நைட்ரஜன் சமன் செய்தல்
50 சதவிகித நைட்ரஜனை உயிர்ம ஆதாரங்கள் கொண்டு சமன் செய்யலாம். (எக்டருக்கு 850 கிகி மண்புழு உரம்) மண்ணில் கார அமில தன்மை 6 க்கும் குறைவாக இருக்கும் போது, பயறுவகை பயிர்களுக்கு சுண்ணாம்பு அளிக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்: விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு உயிர்த்தண்ணீர் மூன்றாவது நாளிலும், பூ பிடிக்கும் பருவத்திலும் 50 சதவிகித பூ பூக்கும் பருவத்திலும் காய் வளர்ச்சிப் பருவத்திலும் நீர் பாய்ச்ச வேண்டும். நீர் தேங்கி நிற்பதை தவிர்த்திட வேண்டும்.
களை கட்டுப்பாடு
களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லியான பென்டிமெத்தலின் ஏக்கருக்கு 0.75 கிலோ (2.5 லிட்டர்/எக்டர்) விதைத்த மூன்றாம் நாளில் தட்டை விசிறி நுன்குழல் கொண்ட பேக்பேக் அல்லது நேப்சாக் அல்லது ராக்கர் தெளிப்பானில் ஒரு எக்டருக்கு 500 லி தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு பாசனம் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து விதைத்த 30-35ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும்.
களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால், விதைத்த 20வது நாளிலும் மற்றும் 35வத நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும்.
ஆட்கள் பற்றாக்குறை இருந்தால், விதைத்த 3ம் நாளில் பென்டிமெத்தலின் 0.75 கிலோ (2.5லி/எக்டர்) அளிக்கவும். தொடர்ந்து களை முளைத்த பிறகு இமாசிதிபர் @ 60 கி ai/எக்டரை 15 நாளிலும் மற்றும் குயிசலோபாப் களை முளைத்த பின் (களைகளில் 2-3 இலைகள் இருக்கும்பொழுது) பரந்த இலை மற்றும் புல்தரை களைகளை கட்டுப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.
இரண்டும் இருந்தால், டேங்கில் இமாசிதிபர் @ 60 கி ai/எக்டர் மற்றும் குயிசலோபாப் இதைல் @ 50 கி ai/எக்டர் களை முளைத்த 15-20ம் நாள் (களை 2-3 இலை பருவத்தில்) தெளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
விதைத்த 3ம் நாள் களை முளைப்பதற்கு முன் மெட்டலாகுளோர் எக்டருக்கு 1.0 கிகி தெளிக்க வேண்டும். தொடர்ந்து விதைத்த 40ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும்.
டைஅமோனியம் பாஸ்பேட் அல்லது யூரியா, என்.ஏ.ஏ மற்றும் சாலிசிலிக் அமிலம் தெளித்தல்
பூக்கும் முன் இலைத் தெளிப்பாக என்.ஏ.ஏ 40 மிகி/லி ஒரு முறை மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
டி.ஏ.பி 20 கி/லி அல்லது யூரியா 20 கி/லி பூக்கும் தருணத்தில் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.
சாலிசிலக் அமிலம் 100 மிகி/லி பூக்கும் முன் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.