வெங்காய நாற்றுகளை எப்படி உருவாக்குவது? தேர்வு மற்றும் பராமரிக்க சில வழிகள்..

 
Published : May 03, 2017, 12:41 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
வெங்காய நாற்றுகளை எப்படி உருவாக்குவது? தேர்வு மற்றும் பராமரிக்க சில வழிகள்..

சுருக்கம்

How to make onion seedlings Some Ways to Choose and Maintain

நாற்றங்கால் அமைப்பு:

வீரியமுள்ள நாற்றுகளைப் பெற நன்கு பயன்படுத்திய ஒரு சென்ட் நிலத்திற்கு 200 கிலோ வரை மக்கிய தொழுஉரம் அல்லது கம்போஸ்ட் போட்டு மேட்டுப்பாத்தியில் நாற்று விட வேண்டும்.

விதைப்பு:

ஒரு எக்டேருக்கு தேவையான 2.5 – 3 கிலோ விதையை விதைக்கு 3 சென்ட் நாற்றங்காலில் விதைப்பு போதுமானது.

மேட்டுப்பாத்தியில் 10 செமீ இடைவெளியில் கோடுகள் போட்டு விதைகளை பரவலாக விதைக்க வேண்டும்.

பின்கோடுகளில் போட்ட விதைகளை மணல்(அல்லது) நாற்றங்கால் மண் கொண்டு மூடிவிட வேண்டும். அதன்பிறகு மேட்டுப்பாத்திகள் நன்கு மூழ்கும் அளவிற்கு நீர் பாய்ச்ச வேண்டும்.

நாற்றுகள் முளைத்த பிறகு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

நாற்றங்காலுக்கு உரம் இடுதல்:

நாற்றங்காலுக்கும் உரம் அவசியம். இதற்கு ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு இரண்டு கிலோ டி.ஏ.பி உரம் இடுவதால் நாற்றுகள் நன்கு ஊட்டத்துடன் வளர்கின்றன.

மேலும் நாற்றுக்களை பிடுங்கும் போதும் வேர் அறுபடாமல் சுலபமாக வரும். டி.ஏ.பி உரம் இல்லாவிட்டால், 6கிலோ யூரியாவும் 12kg சூப்பர் பாஸ்பேட்டும் சேர்த்து இடலாம்.

வேர் அறுபடாத நாற்றுக்களை வயலில் நடும்போது எளிதில் அவை நிலத்தில் பிடிப்பு கொள்கின்றன. இதைத்தான் கிராமங்களில் பச்சை திரும்பி விட்டது எனக் கூறுகின்றனர்.

நாற்றின் வயது:

விதைப்பயிர் செழித்து வளர்வதில் நாற்றின் வயது முக்கிய பங்கு வகுக்கிறது.

வயது குறைந்த நாற்றுகளையோ அல்லது வயது அதிகமான நாற்றையோ நடுவதால் மகசூல் குறைகின்றது.

வெங்காய நாற்றுகளை, 35 - 40 நாட்களில் எடுத்து நட வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?