சாதிக்காய் சாகுபடி:
1.. எல்லா வகை மண்ணிலும் வளரும்
2.. தென்னை, பாக்கு மற்றும் ரப்பர் தோப்புகளில் ஊடு பயிராகப் சாதிக்காய் பயிரிடலாம்.
3.. நிழல் அவசியம் தேவை.
நடவு முறை
1.. நடவு செய்வதற்கு முன் ஒன்றரை அடி நீள அகல ஆழத்தில் குழிகள் எடுத்து ஒவ்வொரு குழியிலும் 2 கிலோ சாணம் அல்லது இயற்கை உரம், 100 கிராம் வேப்பம் புண்ணாக்கு இட்டு சாதிக்காய் கன்றுகளை நடவேண்டும். உடனே தண்ணீரும் பாய்ச்ச வேண்டும்.
2.. அடுத்த 4 நாட்களுக்கு ஒரு முறை என்ன கணக்கில் தண்ணீர் போதுமானது
3.. நீர் பாசனத்தில் சிக்கனத்திற்கும் கன்றின் வளர்ச்சிக்கும் சொட்டுநீர் பாசனம் சிறந்தது –!
4.. மூன்றரை வருடத்தில் மூன்றரை முதல் நான்கரை அடி உயரம் வரை வளரும். அப்போது முதல் சாகுபடிக்கு மரம் தயாராகும்.
5.. டிசம்பரில் பூ பூக்கும். பிப்ரவரியில் காய் பிடிக்கும். மே முதல் செப்டம்பவர் வரை அறுவடை செய்யலாம்.
6.. பழுத்த ஜாதிக்காய் ஆரஞ்சுப் பழம்போல் இருக்கும். அத்துடன் அதில் வெடிப்புகள் தோன்றும். இதுதான் அறுவடைக்கான அறிகுறி.