மல்பெரி நாற்று உற்பத்தி செய்யதேவையான நிலம்:
அ.. 6.5 முதல் 7.0 வரை கார அமிலத்தன்மை கொண்ட வண்டல் கலந்த செம்மண் நிலம் சிறந்தது.
ஆ. மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யக்கூடிய அளவு தண்ணீர் வசதி இருக்க வேண்டும்.
இ. மல்பரி நடவு செய்யும் முன் அடியுரமாக ஏக்கருக்கு 8 முதல் 10 டன் தொழுஉரம் இடவேண்டும்.
ஈ. நிலத்தை 35 செ.மீ ஆழத்திற்கு கொத்தியோ அல்லது உழவு செய்தோ பண்படுத்த வேண்டும்.
உ. 10 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும்.
ஊ. பாத்திக்கு பாத்தி 11/2 அடி இடைவெளி விட்டு பாத்திகள் அமைத்தல் வேண்டும்.
எ. பாத்திகளின் இடையில் பாசனக் கால்வாய்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு ஒரு ஏக்கரில் 1,065 பாத்திகள் அமைக்கலாம்.