1.. பால் கறக்கும் முன்பே சாணங்களை நீக்கி கொட்டிலை சுத்தம் செய்துவிடவேண்டும்.
2.. கைகள் சுத்தமாகக் கழுவப்பட்டு, ஈரமின்றி துணியால் துடைக்கப்பட்டிருக்க வேண்டும்.
3.. ஒவ்வொரு எருமையின் காம்பையும் கழுவிய பின் தனித்தனி, சுத்தமான துணிகள் பயன்படுத்தி, துடைக்க வேண்டும். இல்லையெனில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய காகிகதங்களை உபயோகிக்கலாம்.
4.. பால் கறந்து முடிக்கும் போது காம்பு மற்றும் மடியை நீரில் கழுவிவிடவேண்டும்.
5.. பால் கறக்கும் பாத்திரங்கள் நன்கு கழுவி சுத்தமாக இருப்பதுடன், மூடியுடன் இருக்கவேண்டும்.
6.. பாலானது சாணம், தீவனம் போன்றவற்றின் வாசனையை எளிதில் ஈர்த்துக் கொள்ளக்கூடியது. எனவே பாலைக் கறந்த உடன் மூடி வைக்கவேண்டும்.
7.. பாலை நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு எட்டாமல் வைத்திருந்து, கூடிய விரைவில் பால் சேகரிப்போரிடம் கொடுத்து விடுதல் நலம்.