தக்காளி சாகுபடி:
இரகங்கள்
கோ-1, 2, 3, பி.கே.எம்.1, பூசா ரூபி, பையூர் ஆகிய இரகங்கள்
பருவம்:
இதனை பிப்ரவரி, மார்ச், ஜூன், ஜூலை, நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் விதைக்கலாம்.
விதை நேர்த்தி
ஒரு ஹெக்டேருக்கு 350-400 கிராம் விதைகள் போதுமானது. ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதைகளை 40 அசோஸ்பைரில்லம் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை ஒரு மீட்டர் அகலமுள்ள மேட்டுப்பாத்திகளில் 10 செ.மீ. வரிசை இடைவெளியில் விதைத்து மணல் கொண்டு மூடிவிட வேண்டும்.
நிலத்தை நன்கு உழுது பயன்படுத்திவிட்டு 60 செ.மீ, இடைவெளியில் பார்கள் அமைத்து 25 நாள் வயதுடைய நாற்றுகளை பயிரின் ஒரு பக்கத்தில் நடவேண்டும்.
நடுவதற்கு முன்னர் இரண்டு கிலோ அசோஸ் பைரில்லம், நுண்ணுயிர் கலவையை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்துவிட வேண்டும்.
நட்ட உடன் முதல் தண்ணீரும், பிறகு 3-வது நாள் உயிர் தண்ணீரும், பிறகு வாரத்திற்கு ஒரு முறையும் நீர் பாசனம் செய்ய வேண்டும்.
அதற்கு பின்னர் தேவைப்படும் போது நீர் பாய்ச்சினால் போதுமானது.
உர நிர்வாகம்:
ஒரு ஹெக்டேருக்கு தொழு உரம் 25 டன், தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 100 கிலோ, சாம்பசல்சத்து 50 கிலோ, போராக்ஸ் 10 கிலோ, துத்தநாக சல்பேட், 50 கிலோ, ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும்.
நட்ட 30-வது நாள் தழைச்சத்து 75 இட்டு மண் அணைக்க வேண்டும்.
நாற்று நட்ட 15-ஆம் நாள் டிரைகான்டினால் 1 மிலி / 1 லிட்டர் என்ற அளவில் பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும்.
இவ்வாறு தெளிப்பதால் மகசூலை அதிகரிக்க செய்யலாம்.