ஆடுகள் இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிட்டது என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

 |  First Published Nov 18, 2017, 1:57 PM IST
How to find out that goats are ready for breeding?



இனச்சேர்க்கை காலம்

ஆடுகள் பொதுவாக சூட்டிற்கு வரும் போது அவைகளிடம் கீழ்க்காணும் அறிகுறிகள் தென்படும்.

Latest Videos

undefined

வாலை அடிக்கடி ஆட்டுதல், பாலுறுப்புகள் சிவந்து காணப்படுதல், சிறிது மியூகஸ் திரவம் வழிதல், ஆடு அமைதியின்றிக் காணப்படுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அலறுதல்.

சூட்டில் இருக்கும் காலம் 18-21 வரை நாட்கள் வேறுபடும்.  பெட்டை ஆடு சூட்டிற்கு வந்த இரண்டாவது நாளில் இனச்சேர்க்கை செய்தல் நலம். ஏனெனில் சூட்டிற்கு வந்தபின் 22-48 மணி நேரம் வரை தான் அணுக்கள் உயிருடன் இருக்கும்.

நல்ல தீவனம் அளித்து முறையாகப் பராமரித்தால் இறப்பு விகிதம் குறைந்து, சினைப்பிடித்தல் அதிகரிக்கும்.

இனச்சேர்க்கை அல்லது கருவூட்டல் நேரமானது தட்பவெப்பநிலை, இடம், இனம் போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.

பெட்டை ஆடுகள் கருவூட்டம்

பெட்டை ஆடுகள் 1 வயதிலிருந்தே கருவூட்டலுக்குத் தயாராகிவிடும். பொதுவாக 10-15 மாதத்தில் கருவூட்டல் செய்தால் 15-20 வது மாதத்தில் முதல் குட்டி ஈனும் சினைக்காலம் 151+3 நாட்கள் வருடத்திற்கு ஒரு முறை கருவூட்டல் செய்தல் நலம்.

சில இனங்கள் 2 வருடத்திற்கு 3 முறை அதாவது 18 மாதங்களுக்கொரு முறை குட்டி ஈனும் 5-7 வருடங்களில் அதிகக் குட்டிகள் ஈனும். சில இனங்கள் 12 வயது வரை கூட நிறையக்குட்டிகள் ஈனும் திறன் பெற்றுள்ளன.

நன்கு பராமரிக்கப்பட்ட ஆடானது அடுத்த குட்டி ஈனுவதற்கு முந்தைய மாதம் வரை பால் கறக்கக்கூடியதாக இருக்கும்.

சினை ஆட்டை சரியான தீவனமளித்து, நன்கு பாதுகாக்கவேண்டும்.

மழை, வெயிலிருந்தும் ஒட்டுண்ணிகளிடமிருந்தும் முறையாகப் பராமரித்தால் சிறப்பான கன்றுகளைப் பெற முடியும்.

சினைப் பருவம்

பால் சுரத்தல் தற்காலிகமாக அதிகரிப்பதே ஆடு சினை அடைந்ததன் முதல் அறிகுறியாகும்.

ஓஸ்டிரஸ் திரவம் வழிவது நின்று விடும். சினைப் பிடித்த முதல் 3 மாதங்களில் குட்டியின் உடல் உருவாகத் தொடங்கும். 6-8 வாரங்களில் குட்டியின் தலைப் பாகம் உருவாகும்.

கன்று ஈனும் பெட்டை ஆடானது உருவத்தில் மாற்றம் பெற்றுக் காணப்படும். சில சமயங்களில் வயிறு புடைப்பதும் தெரியாது.

குட்டி ஈனுவதற்கு முன் 6-8 வாரங்களில் மடி உப்பிக் காணப்படும். ஆனால் இதை மட்டும் வைத்து ஆடு சினைப்பிடித்துள்ளதாக எண்ணிவிட முடியாது. சில சமயங்களில் சினைப் பிடிக்காத போதும் மடியிலிருந்து பால் சுரக்கும்.

ஒரு சாதாரண ஆடு 2 குட்டிகள் ஈனும், நன்கு பராமரிக்கப்பட்ட ஆடு 5 குட்டிகள் வரை ஒரே நேரத்தில் ஈனும். ஆனால் குட்டிகள் எந்தளவு குறைவாக ஈனுகிறதோ அந்த அளவுக்கு ஆரோக்கியமான குட்டிகளாக இருக்கும்.

குட்டிகளின் எண்ணிக்கை ஆட்டு இனம். தட்பவெப்பநிலை, சினைப் பிடிக்கும் முறை ஆகியவற்றைப் பொறுத்தது. ஹிசார் பண்ணையில் பீட்டல் இனமானது 35 சதவிகிதம் ஒரு குட்டியும் 54 சதவிகிதம் இரு குட்டிகளும், 6.3 சதவிகிதம் 3 குட்டிகளும் 0.4 சதவிகிதம் 4 குட்டிகளும் போடும் திறன் பெற்றது.

ஜமுனாபுரியியல் இரட்டைக் குட்டி ஈனும் சதவீதம் 19-50 சதவிகிதம் 19-50 சதவிகிதம் அளவு வேறுபடுகிறது. இதுவே பார்பரியில் 47-70 சதவிகிதம் அளவு வேறுபடுகிறது.

click me!