உலர் மலர்கள்:
பலவகை வண்ணங்களையும் நறுமணங்களையும் கொண்ட உலர் மலர்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தாவர பாகங்கள் வீட்டுக்கு அழகும் புத்துணர்ச்சியும் தருகின்றன.
வருடங்கள் வரை பல மதிப்புகூட்டும் தொழில்நுட்பங்கள் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. உலர் மலர் தொழிற்சாலைகள் இந்தியா முழுவதும் தமிழகத்தில் பரவலாகவும் காணப்படுகின்றன.
தமிழகத்தில் முக்கிய தொழிற்சாலைகள் தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, சென்னையில் இயங்கிவருகின்றன.
உலர்மலர் தொழில்நுட்பம்:
தனித்தன்மையும் வடிவமும் அழகும் கொண்ட காய்ந்த தாவர பாகங்களான இலைகள், பூக்கள், விதைகள், மரப்பட்டைகள், பூஞ்சாணங்கள் பல வகை தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படுகின்றன.
சேகரிக்கப்பட்ட காய்ந்த தாவர பாகங்கள் பல வகை உலர் மலர் தொழில்நுட்பங்கள் (உலரவைத்தல், நிறம் நீக்குதல் மற்றும் சாயம் ஏற்றுதல்) மூலம் பதப்படுத்தப்படுகின்றன.
வகைகள்:
வீட்டு அலங்காரப் பொருட்கள்: மேஜை, ஜாடி அலங்காரங்கள், மலர் வளையங்கள், மாலைகள், தோரணங்கள், சுவர் அலங்காரங்கள், சிறு மரங்கள், வாழ்த்து அட்டைகள்.
வீட்டு நறுமணப் பொருட்கள்:
உலர் மலர்கள் கொண்ட நறுமணக்கலவைகள் (பாட்புரி) நறுமணப்பைகள், வாசனைத் திரவியங்களை வெளியிடும் கருவிகள், தைலங்கள். உலர் மலர்களை கடல்வழிப்பயணம் மூலம் போக்குவரத்து செய்யலாம்.
ஆனால் கொய்மலர்களை துரிதப் போக்குவரத்து மூலமாக மட்டுமே அனுப்பலாம். இத்தொழிலை சிறு தொழிலாக சுயஉதவி குழு பெண்கள் செய்யலாம்.
மூலப்பொருட்கள் சேமிப்பின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.70-80 வருவாய் ஈட்டலாம். மதிப்புக் கூட்டு தொழில்நுட்பங்கள் மூலம் சுமார் ரூ.100-150 வரை நாள் ஒன்றுக்கு பெறலாம்.
அலங்காரப் பொருட்களைச் செய்ய தேவையான அங்கங்களின் மற்றும் துணைப் பொருட்களைத் தயாரித்தல் மூலம் சுமார் 180-200 ரூபாய் வரை நாள் ஒன்றுக்கு பெறலாம்.
முழு அலங்கார பொருட்களைச் செய்து தருவதன் மூலம் அல்லது நேரடியாக கொள்முதல் செய்வதன்மூலம் நாளொன்றுக்கு ரூ.300 முதல் 500 வரை ஈட்டலாம்.