சேப்பங்கிழங்கு அதிகளவிலான தண்ணீரை விரும்பும் பயிர். எப்பொழுதும் ஈரம் இருக்குமாறு பார்த்து கொள்ளவேண்டும். அதே நேரத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலத்தில் அதிக நீர் தேங்ககூடாது.
3 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு அரை டன் விதை கிழங்கு தேவைப்படும். இதில் ஓரிரு ரகங்கள் மட்டுமே உள்ளன.
ஏக்கர் கணக்கில் பயிரிடப்படும் போது இரண்டு அடி பார் அமைக்கவேண்டும். முக்கால் அடிக்கு ஒரு கிழங்கு இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.
கிழங்கு வகை பயிர்களுக்கு பாஸ்பேட் சத்து அதிகம் தேவைப்படும். அதனால் கட்டாயமாக தொழுஉரம் அடி உரமாக இடவேண்டும்.
உயிர் உரங்கள் அதிகம் இடுவதன் மூலம், மற்றும் மீன் அமிலம், பழஜீவாம்ருத கரைசல் போன்றவை இடுவதன் மூலம் அதிகமான திரட்சியான கிழங்குகள் பெறலாம்.
ஆறு மாதங்களில் அறுவடை செய்ய தயாராகிவிடும். நன்கு விளைந்தால் சில சமயம் ஏக்கருக்கு இரண்டு லட்சம் வரை வருமானம் கிடைக்க வாய்ப்பு.
ஆடி பட்டம் சேப்பங்கிழங்கு பயிர் செய்ய ஏற்ற பட்டமாகும். இந்த பட்டத்தில்தான் அதிகம் பயிர் செய்ய படுகின்றது.
சேப்பங்கிழங்கை தென்னை தோப்பு களில் ஊடுபயிராகவும் பயிரிடலாம். லேசான நிழலிலிலும் நன்கு வளரும்.
நோய்கள் பெரிதாக தாக்குவது இல்லை அதாவது மஞ்சள் போன்று கிழங்கு அழுகல் நோய்கள் தாக்குவது குறைவு. கற்பூர கரைசல் தொடர்ந்து தெளிப்பதனால் அணைத்து வித நோய் தாக்குதலில் இருந்தும் பாது காக்கலாம்.
பயிர் அறுவடைக்கு வரும் போது இலைகள் முற்றிலும் காய்ந்து விடும். வயலில் அப்படியே வைத்து பின் தேவை படும்போது அறுவடை செய்யலாம்.
அறுவடைக்கு பின் விலை இல்லை என்றால் இரண்டு மாதம் வரை இருப்பு வைத்து பிறகு விற்கலாம்.