முட்டைகளில் கரு உயிரோடுதான் இருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

 |  First Published Nov 27, 2017, 12:49 PM IST
How to detect that the nucleus is alive in eggs?



முட்டையினுள் உள்ளிருக்கும் கருவின் வளர்ச்சி நிலையினை பார்ப்பதற்கும், முட்டை ஓட்டில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய முட்டைகளை ஒரு ஒளி ஆதாரத்தின் மீது வைத்து கண்டறியலாம். 

முட்டைகளை அடை வைத்த 5ம் நாள் முதல் அவற்றை ஒளி ஆதாரத்தின் அருகில் வைத்துப் பார்க்கலாம். ஆனால் இந்நிலையில் கருவில் ஏற்பட்டிருக்கும் குறைபாடுகளைக் கண்டறிவது கடினம். 

வணிகரீதியாகச் செயல்படும் குஞ்சு பொரிப்பகங்களில் முட்டைகள் அடைகாப்பானிலிருந்து குஞ்சு பொரிப்பானுக்கு மாற்றப்படும் நாளன்று (அடை வைத்து 19ம் நாள்) ஒளி ஆதாரத்திற்கு அருகில் வைத்துப் பார்க்கப்படுகின்றன. 

இரண்டு முறையில் கேண்டிலிங் எனப்படும் ஒளி ஆதாரத்திற்கு அருகில் வைத்து கருவின் வளர்ச்சியினைக் கண்டறிவது செய்யப்படுகிறது. விரைவாகச் செயல்படும் முறையில் முட்டைகளை ஒரு மேசை அல்லது பெரிய கருவியின் மீது முட்டை அட்டையிலுள்ள அனைத்து முட்டைகளையும் அட்டையோடு வைத்து குறைபாடுகள் கண்டறியப்படுகின்றன. 

தனித்தனியாக முட்டைகளை கேண்டலிரில் வைத்துப் பார்ப்பது நேரம் அதிகமாகத் தேவைப்படும் என்றாலும் அதுவே மிகவும் நுண்ணிய முறையாகும்.

click me!