மணிலா ஒரு இலாபம் தரும் பணப் பயிராகும். இதைத் தாக்கும் பூச்சிகள் மிகக் குறைவே. இருந்தாலும் இதைகவனிக்காமல் விட்டால் பாதி மகசூலை அழித்துவிடும்.
மணிலாவைத் தாக்கும் பூச்சிகளில் அசுவினி புருடோனியாபுழு, அமெரிக்கன் காய்ப்புழு, அந்துப்பூச்சி, தத்துப்பூச்சி,வெட்டுக்கிளி போன்றவை உள்ளன. இவை மட்டுமில்லா மல்நன்மை செய்யும் பூச்சிகளும் உள்ளன.
அவை பொறிவண்டு,குளவி, எறும்பு சிலந்தி என பல உள்ளன. நாம் தீமை செய்யும்பூச்சிகளை அழிக்க பூச்சிக்கொல்லிகளை உபயோகித்தால் அது நன்மை செய்யும் பூச்சிகளை அழித்துவிடும்.
அதாவது, தீமை செய்யும் பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிடக் கூடிய நன்மை செய்யும் பூச்சிகளை அழித்து விடுகிறது. பின்வரும்வழிமுறைகளைக் கையாண்டால் தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் அழிக்கலாம்.
50 கிராம் பச்சைமிளகாய், 1/2 கிலோ பூண்டு , 1/2 லிட்டர் மண்ணெண்ணை, 100 கிராம் காதிசோப்பு ஆகியவை தேவையான பொருட்கள். பூண்டையும் பச்சை மிளகாயையும் அரைத்து ஐந்து லிட்டர் தண்ணிரில் கரைக்க வேண்டும்.அதோடு காதி சோப்பைக் கரைக்க வேண்டும்.
பின்பு மண்ணெண்ணையையும் கலக்க வேண்டும். இதை நன்றாக ஒரு குச்சியால் கலக்க வேண்டும். அப்படியே 24 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். 24 மணிநேரம் கழித்து மேலே படிந்துள்ளதைத் தனியாக எடுத்து 180 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு ஏக்கருக்கு அடிக்கலாம்.
இதை மணிலாபோட்ட 15 வது நாளிலிருந்து 15 நாளுக்கு ஒரு முறை அடித்தால் பூச்சிகளின் தாக்குதல் அறவே இருக்காது.