கத்திரிக்காயை இயற்கை வழியில் எவ்வாறு பயிர் செய்வது?

 |  First Published Aug 4, 2017, 1:19 PM IST
How to crop the eggplant natural way



நம் அன்றாட உணவில் அதிகமாக பயன்படுத்தும் காய்கறிகளில் முதன்மையானது கத்தரி. பொதுவாக தை, சித்திரை மற்றும் ஆடி ஆகிய பட்டத்தில் நடவு செய்கின்றனர்.

பச்சை, நீளம், நெட்டை, குட்டை என பலவகை கத்தரிக்காய்களை நாம் அன்றாடம் காண்கிறோம்.

Tap to resize

Latest Videos

முப்பது நாட்களான கத்தரி நாற்றுகள் நடவுக்கு சிறந்த தேர்வாகும். நாற்றங்காலில் தொழு உரம் அதிகமாக இடுவதன் மூலம் நீளமான வேர்கள் வளர வழிவகுக்கும். இதனால் நாற்றுகள் விரைவில் நாற்று துளிர் விட்டு நன்றாக வளரும்.

ஒவ்வொரு நாற்றுக்கும் 3 × 3 என்ற அளவில் இடைவெளி விட்டு நடவு சைய்வது சிறப்பு.

ஒரு ஏக்கருக்கு பத்து டன் தொழுஉரம் இடவேண்டும். சூடோமோனஸ், டிரைகோடர்மா விரிடி, அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ஜிங்க்மொபலைசர், பொட்டாஷ் பேக்டீரியா தலா மூன்று லிட்டர். VAM 10 kg இவைகளை அடி உரமாக இடவேண்டும்.

மேம்படுத்தப்பட்ட ஜீவாம்ருத கரைசல் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். இயற்கை முறையில் சாகுபடி செய்த கத்தரிக்கு இதை மட்டுமே உரமாக கொடுத்தால் போதுமானதாகும். நல்ல மகசூல் பெறமுடியும்.

நுனி தண்டு துளைப்பான், காய்புழு, அசுவினி, வேர் அழுகல் ஆகியவை கத்தரியை அதிகம் தாக்கும் நோய்கள்.

கற்பூரகரைசல் மற்றும் மீன் அமிலம் இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவது மூலம் நோய்களை கட்டுப்படுத்தலாம். தண்ணீர் அதிகம் தேங்காமல் பார்த்துக்கொள்வதின் மூலம் வேர் அழுகல் நோயிலிருந்து செடிகளை காப்பாற்றலாம்.

மஞ்சள்தூளைப் பயன்படுத்தி கத்தரியில் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும். 100 கிராம் மஞ்சள் தூளை 10 லிட்டர் தண்ணீர்ல கலந்து அதிகாலை அல்லது அந்தி சாயும் நேரத்தில் செடிகள் நல்லா நனையும்படி தெளித்தால் கத்தரியில் காய் புழுக்கள் வராது.

தேங்காய் பால் பிண்ணாக்கு கரைசல் மற்றும் பழ கரைசல் தெளிப்பு மூலம் வாளிப்பான(திரண்ட) காய்கள் பெறலாம்.

மீன் அமிலம் ஐந்து லிட்டர் ஒரு ஏக்கருக்கு இருபது நாளைக்கு ஒரு முறை மண்புழு உரத்துடன் கலந்து இடலாம். மண்புழு உரம் தயார் செய்து பயன் படுத்தும் போது அதிக மகசூல் கிடைக்கும் மற்றும் செடிகளின் ஆயுள் நீடிக்கும்.

நாற்று நட்ட இருபதாம் நாள் தேவைப்பட்டால் நுனி கிள்ளி விடலாம். இவ்வாறு செய்வதால் அதிக கிளைகள் மற்றும் மகசூலை பெற வாய்ப்பு . இரண்டு நாள் ஒரு முறை காய் பறிக்கலாம்.

ஊடுபயிராக செடி அவரை, முள்ளங்கி, சோம்பு, பீட்ருட் நடலாம். ஒருசில கீரை வகைகளை கூட ஊடுபயிராக நடலாம். அதாவது வரப்பு சுற்றிலும் புளிச்சகீரை நடலாம் அவற்றின் மேல் பொறியல் தட்டை கொடிகளை ஏற்றி விடலாம் அவை சத்து உறிஞ்சு வதால் அவற்றிற்கு சேர்த்து சத்து இடவேண்டும்.

click me!