சாறு உறிஞ்சும் பூச்சிகளை இயற்கை முறையில் எவ்வாறு கட்டுப்படுத்துவது?

 |  First Published Dec 17, 2016, 12:27 PM IST



காய்கறி பயிர்கள் மற்றும் அனைத்து வகை பயிர்களிலும் சாறுஉறிஞ்சும் பூச்சியின் தாக்குதல் அதிகமாக சேதாரத்தை உண்டுபண்ணுவது பறக்கும் பூச்சியான வெள்ளை ஈ அவற்றை கட்டுப்படுத்த இரசாயன மருந்துகள் அதிகமாக உள்ளது. அவற்றை தெளித்தால் குறைந்த நாட்களில் திரும்பவும் வந்துவிடும். திரும்பவும் மருந்து அடித்தால் அந்த பூச்சிக்கு எதிர்ப்பு தன்மை அதிகமாகி பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தும் .


இயற்கைமுறையில் கட்டுப்படுத்த தகரம் 1½ அடி நீளத்திற்கு 1 அடி அகலம் உள்ள தகரத்தை வெட்டி எடுத்து அதில் மஞ்சள் பெயிண்டை தடவி காய்ந்த பிறகு கீரிஸ் அல்லது விளக்கெண்ணையை தடவி விடனும் இவ்வாறு ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் மஞ்சள் பெயிண்டை தடவி வைத்துவிட வேண்டும்.
மஞ்சள் பெயிண்ட் தடவிய தகடை பயிருக்கு ஒரு அடி உயிரத்திற்கு மேல் கட்டிவிட வேண்டும் பறக்கும் பூச்சிகள் அனைத்தும் அதில் ஒட்டிக்கொள்ளும் இந்த தகடு பல வண்ணங்களில் உள்ளது பூச்சி மருந்து விற்கும் கடைகளில் கேட்டால் கிடைக்கும். வாங்கி பயன்படுத்தலாம்.
இலைப்பேனுக்கு ஊதா வண்ணம் கொண்ட ஒட்டுபொறியும் மற்ற வெள்ளை ஈ போன்ற சாறுஉறிஞ்சும் பூச்சிகளுக்கு மஞ்சள் நிற ஒட்டுப்பொறியையும் வாங்கி பயன்படுத்தலாம்.
பயிர் சாகுபடி செய்யும் பொழுதே வரிசைப்பயிராக வாய்க்காலில் தட்டப்பயறுஇ மக்காச்சோளம் போன்ற வெள்ளை நிறம்இ மஞ்சள் நிறம் கொண்ட சிறிய பூக்களை உடைய பயிர்களையும் அல்லது அதிக மகரந்தம் உள்ள பயிர்களையும் வரிசைப்பயிராக நடவுசெய்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்

Latest Videos

click me!